தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடுமையான மழை பொழிவு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - தாமிரபரணி ஆற்றின் தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு.!
வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் கடுமையான மழை பொழிவு ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று 28.11.25 ஏரல் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் வழியாக செல்லும் தண்ணீரை பார்வையிட்டு தொடர்ந்து தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கன மழை காரணமாக நாளை தமிழ் நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக பரவும் தகவல் தவறானது என்றும் மழையை பொறுத்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுக்கும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
