"தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது" - அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!
வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்,
புஷ்பாநகா், முல்லை நகா், அம்பேத்கா் நகா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீா் அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்:-
"தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்த நிலையில் தாழ்வான பகுதிகளான மாநகராட்சிக்குட்பட்ட 16,17வது வார்டு பகுதியான கதிர்வேல் நகர், தபால் தந்தி காலனி, பாரதி நகர், புஷ்பா நகர் கோக்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இந்த பகுதிகளில் மழை நீைர அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாக சார்பில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் துறைமுக தீயணைப்பு வாகனம் தூத்துக்குடி நகர தீயணைப்பு வாகனம் மாநகராட்சி மின் மோட்டார்கள் கொண்டு மழை நீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது மேலும் இந்த பகுதிகளில் மழை நீரை விரைவாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்தப் பகுதியில் மட்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக சார்பில் 75 மின்மோட்டார் களும் திமுக சார்பில் 36 மின்மோட்டார்கள் என 100க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது மேலும் இன்னும் ஒரு வார காலத்திற்கு மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்த நிலையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் உடனே அகற்றுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது" என அமைச்சர் கீதாஜீவன் கூறினாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா்கள் கண்ணன், ராமா், நாகேஸ்வாி, பகுதி செயலாளர் ஜெயக்குமாா், மாநகர இளஞைர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், வட்டச்செயலாளர் மந்திரகுமாா், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.
