கிராம உதவியாளர் பணிகளுக்கான தேர்வு ஒத்திவைப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிகளுக்கான எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டையபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய ஒன்பது வட்டங்களில் 2025-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணி நியமனம் தொடர்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னர், 01.11.2025 (சனிக்கிழமை) முதல் 15.11.2025 (சனிக்கிழமை) வரையிலும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரிலும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இந்நேர்வில் 17.12.2025 (புதன்கிழமை) அன்று நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து 02.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்தும் நிருவாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத்  தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!