வ.உ.சி. துறைமுகம் அம்புஜா சிமெண்ட் (அதானி குழுமம்) கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் கிளிங்கர் கப்பலை வரவேற்றது
வ.உ.சி. துறைமுகம் 19.11.2025 அன்று குஜராத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட் லிமிடெட்டுடன் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, முதல் கிளிங்கர் சரக்கை பெற்றுள்ளது. குறைந்தபட்ச உத்தரவாத சரக்கு (Minimum Guaranteed Tonnage-based Incentive Scheme) திட்டத்தின்படி அமைந்துள்ள இந்த ஒப்பந்தத்தில், வருடத்திற்கு 2,50,000 மெட்ரிக் டன் கிளிங்கர் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தின் மூலம் கொண்டுவரப்படும் என்று உறுதி வழங்கப்பட்டது.
அதானி குழுமம் கடந்த வருடம், அதன் விரிவாக்க இயக்கத்தின் ஒரு பகுதியாக சிகே பிர்லா குழும நிறுவனமான ஓரியண்ட் சிமெண்டை ரூ.8,100 கோடி மதிப்பீட்டில் கையகப்படுத்துதியது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 24.11.2025 அன்று, வடக்கு சரக்குத்தளம்-2 (North Cargo Berth-II) கப்பல் தளத்தில் முதன் முதலாக MV Lima Trader என்ற கப்பல் மூலமாக கிளிங்கர் சரக்கு வந்தடைந்தது. குஜராத்திலுள்ள சாங்கி துறைமுகத்திலிருந்து 56,440 மெட்ரிக் டன் கிளிங்கர் இந்த கப்பல் மூலமாகக் கொண்டு வரப்பட்டது. 13.1 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்தக் கப்பலுக்கு M/s Seaport Shipping கப்பல் முகவராகவும், M/s Seaport Logistics சரக்குக் கையாளுநராகவும் (Stevedore) செயல்பட்டன.
இந்த கிளிங்கர் சரக்கு. துறைமுகத்திலிருந்து சுமார் 23.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மேல அரசடி, பகுதியில் உள்ள அம்புஜா சிமெண்ட் லிமிடெட்-டின் அரவை நிலையதிற்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, சிமெண்டு உற்பத்திற்க்கான செயலாக்கம் மேற்கொள்ளபடுகிறது.
இந்த நிகழ்வைக் குறித்து வ.உ.சி. துறைமுகத்தலைவர் சுசாந்த குமார் புரோஹித், கூறுகையில், இந்த வரலாற்றுச் சரக்கு இறக்கம், நிலையான மற்றும் செலவு குறைவான உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது. மேலும் அவர் இது இந்திய அரசின் உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் திட்டத்துடன் இசைந்து அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், மேலும் பல கிளிங்கர் கப்பல்கள் வரவிருக்கும் மாதங்களில் வ.உசி துறைமுகத்திற்கு வருவதன் மூலம், துறைமுகத்தின் சரக்கு கையாளுதல் அதிகரிக்கப்பட்டு, துறைமுக தொழில் இணைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிமென்ட் தயாரிக்க கிளிங்கர் எனும் மூலப்பொருளே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது . வறண்ட சூழ்நிலைகளில் குறிப்பிடத்தக்க தேய்மானம் இல்லாமல் பல மாதங்கள் இதை வைத்திருக்க முடியும் என்பதால், இது உலகளவில் பெரிய அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. சிமென்ட் உற்பத்தியாளர்கள் சிமெண்டிற்கான மூலப்பொருட்கள் அதிகம் கிடைக்காத பகுதிகளில் தங்கள் சிமென்ட் ஆலைகளுக்கு கிளிங்கரை வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
