தூத்துக்குடி மாநகராட்சி மாற்றுத்திறனாளி நியமண கவுன்சிலா் கனிமொழி எம்.பியிடம் வாழ்த்து பெற்றாா்.
தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆறுமுகம் பதவி ஏற்று கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி குறிஞ்சி நகாில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றிருக்கும் ஆறுமுகத்தை, திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி சந்தித்தாா் அப்போது கனிமொழி எம்.பி பணி சிறக்க வாழ்த்தினார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிா்மல்ராஜ், கவுன்சிலா் பவாணி, வட்டச்செயலாளர் ரவிசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
