தீயணைப்புத்துறை லஞ்ச வழக்கில் அதிகாரியை சிக்க வைக்க திட்டம் - தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றுபவர் உட்பட இருவர் கைது.!
நெல்லை: தீயணைப்புத்துறை துணை இயக்குநரை லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்க வைக்க, அலுவலகத்தில் பணம் வைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனை நடந்த நாளின் முந்தைய நாளன்று இரவில் மர்ம நபர், அலுவலகம் வந்து செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரிக்க தூத்துக்குடி தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றும் ஆனந்த் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
