கிாிக்கெட் வீரா்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீருடை வழங்கினாா்.

 

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூரை சோ்ந்த லவ்லி பிரன்ட்ஸ் கிாிக்கெட் அணிக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஓன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இளையராஜா ஏற்பாட்டில் தூத்துக்குடி கணேஷ்நகாில் உள்ள தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமாிப்பு துறை அமைச்சர்  அனிதா ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் கிாிக்கெட் வீரா்களுக்கு சீருடைகள் வழங்கினார். 

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில்:- விளையாட்டு என்பது எல்லோருக்கும் இளமைபருவத்தில் தேவையான ஓன்றுதான் அதில் ஓவ்வொரு வகையான போட்டிகளை தோ்வு செய்து விளையாடி வருகின்றனா். பலா் தங்களுக்கு விருப்பப்பட்ட விளையாட்டு போட்டிகளை தேர்ந்தெடுத்து தங்களது பொழுதுபோக்கை திறமைகளின் மூலம் வௌிப்படுத்துவது வழக்கமான ஓன்று அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டியை சிறப்பாக செய்து ஊக்குவிக்கும் வகையில் இதை முன்னெடுத்து வழங்கிய ஓன்றிய செயலாளர் இளையராஜாவை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டுதுறையை பொறுப்பேற்ற நாள் முதல் எல்லா விளையாட்டு போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வீரா்களை ஊக்குவித்து வருகிறாா். அதன்மூலம் கடந்த காலத்தை காட்டிலும் இந்த ஆட்சியில் மாநில மற்றும் தேசிய உலக அளவில் வீரா்கள் சாதனை படைத்து வருகின்ற நிலையில் உள்ளனா். விளையாட்டு வீரா்களும் மகிழ்ச்சியாக உள்ளனா். இந்த கிாிக்கெட் விளையாட்டு போட்டியில் பங்கெடுத்து விளையாடும் அனைவரையும் மனதார பாராட்டுகிறேன் என்று கூறினாா். 

மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, ஓன்றிய செயலாளர் இளையராஜா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமாா், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், மற்றும் வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், ஆகியோா் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!