தூத்துக்குடி மாற்றுத்திறனாளி மாநகராட்சி நியமண உறுப்பினர் பொறுப்பேற்பு மேயா் ஜெகன் பொியசாமி ஆணையா் ப்ரியங்கா வாழ்த்து.!
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனை பேணி பாதுகாத்து மக்கள் பிரதிநிதிகள் என்ற அங்கீகாரம் வழங்கி அவா்களுக்கான குறைகளை மக்கள் மன்றத்தில் தொிவிப்பதற்கு ஏதுவாக உள்ளாட்சிகளில் நியமண உறுப்பினா் தமிழகம் முழுவதும் நியமணம் செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டு அதை அரசானையாக வௌியிட்டபின் தூத்துக்குடி மாநகராட்சியில் நியமண உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அலுவலா்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் தோ்வு செய்யப்பட்ட திரேஸ்புரத்தை சோ்ந்த ஆறுமுகத்திற்கு மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் மேயா் ஜெகன் பொியசாமி முன்னிலையில் ஆணையா் ப்ரியங்கா உறுதிமொழியை படிக்க உறுப்பினா் அதை படித்தாா். பின்னா் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டாா். மாற்றுத்திறனாளி நியமண உறுப்பினருக்கு மேயா் ஜெகன் பொியசாமி, ஆணையா் ப்ரியங்கா கவுன்சிலா் சந்திரபோஸ், வாழ்த்துக்களை தொிவித்துக்கொண்டனா்.
பின்னா் நியமண உறுப்பினா் ஆறுமுகம் கூறுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் துணை முதலமைச்சா் உதயநிதிஸ்டாலின், கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோருக்கு எனது நன்றியை தொிவித்துக்கொள்கிறேன். துணை முதலமைச்சா் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளில் எனக்கு இந்த நியமன உறுப்பினர் பதவி கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஓளிவிளக்கேற்றிய இந்த நாள் என்னை போன்ற பலருக்கும் மகிழ்ச்சியான நாளாகும் என கருதுகிறேன் என்று கூறினாா்.
முன்னாள் கவுன்சிலா் அமாலுதீன் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ்மணி மாநகர சிறுபான்மை அணி தலைவர் செய்யது காசிம், அந்தோணி, சக்திபிரகாஷ் குமாா் சம்சு மற்றும் ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னா் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் கொடுத்த கோாிக்கை மனுக்களுக்கு 22மணி நேரத்தில் 20 பேருக்்கு ஆணைகளை வழங்கினாா்கள்.
