வேலூர் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம் - மாநில பொது செயலாளர் கார்த்தியாயினி பங்கேற்பு.!
வேலூர்மாவட்டம் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி முன்னிட்டு வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியில் இன அனி சார்பில் மாவட்டத் தலைவர் ஏகே டிவி நிறுவனர் சரவணகுமார், தலைமையில் வேலூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த பாபா ஷாகிப் அம்பேத்கர், திருவுருவப்படத்திற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதையும் செலுத்தினார்.பின்னர் அரசியலமைப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட சிறுபான்மை தலைவர் காட்பாடி கே, ஜி,குட்டி, பாஜக வேலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்ட துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட பொது செயலாளர் சரவணகுமார், மண்டல தலைவர் ஜெய், காகிதப்பட்டறை பழனி, உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: வெங்கடேசன் வேலூர் மாவட்ட செய்தியாளர்
