குடியாத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா.!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் வார்டு எண் - 32ல் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 11.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நகராட்சி மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், கதிர் ஆனந்த் எம்பி கலந்துக்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் ஒன்றிய கழக செயலாளர்கள் கள்ளூர் ரவி, லோ. இரவிச்சந்திரன், கே.சீதாராமன், ஆர்.முருகேசன், நகர மன்ற உறுப்பினர்கள், கோபாலகிருஷ்ணன். மனோஜ். தீபிகா தயாளன். லாவண்யா குமாரன் நகர கழக துணை செயலாளர் ஜம்புலிங்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் விவேகானந்தன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: வெங்கடேசன் வேலூர் மாவட்ட செய்தியாளர்
