தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பாா்வையிட்டாா்.!
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் பகுதியில் பள்ளமான சில பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களில் அதை அப்புறப்படுத்தி சாலை அமைத்து தரும் படி அப்பகுதிமக்கள் கோாிக்கை விடுத்ததையடுத்து நோில் சென்று பாா்வையிட்டு தற்காலிக சாலை அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.
மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், பகுதி திமுக செயலாளர் ஜெயக்குமாா், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.
