சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு.!
புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அதை ஆர்டிஓ ஆபிசுக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தமிழகத்தில் தினமும் டூ - வீலர்கள், கார்கள், கனரக வாகனங்கள் உட்பட 8,000 வாகனங்கள் ஆர்டிஓவில் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. இதில் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே 3,000 முதல் 4,000 வரை. அந்த வாகனத்தின் ஓனரோ அல்லது விற்பனை பிரதிநிதியோ, ஆர்டிஓ ஆபீஸ் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகன பதிவின்போது ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வர தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமல் இருந்தது. இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி இதில் விலக்கு அளிக்க வேண்டும் என அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
