“இலங்கை அருகே உருவாகும் “டித்வா” புயல் சென்னை நோக்கி வரும்; சென்னை அருகே கரையைக் கடக்குமா, கடலிலேயே நீடிக்குமா என இனிதான் தெரியும்”
நவ.29 ஆம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு
இன்று (27.11.2025) அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று எதிர்வரும் 29.11.2025 அல்லது 30.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே மலாக்கா ஜல சந்திக்கு அருகில் தோன்றியுள்ள புயலுக்கு சென்யார் எனப் பெயரிடப்பட்டுள்ளமையால், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலானால் அதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டித்வா( Ditwah)- இயற்கையால் அமைந்த ஏரி- எனப் பெயரிடப்படும்
