தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் வாக்காளர்கள் நீக்கம்.!

 


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 1,62,527 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்.

அதன்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 197947 வாக்காளர்கள், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில்  236461 வாக்காளர்கள், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 222631 வாக்காளர்கள், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 207054 வாக்காளர்கள், ஓட்டப்பிடாரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் 232536 வாக்காளர்கள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 231529 வாக்காளர்கள்  என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 649224 ஆண்கள், 678752 பெண்கள், 182 இதரர் என மொத்தம் 1,32,81,558 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், 162527 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ஆம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!