தூத்துக்குடி மாநகராட்சி 15வது வாா்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தண்ணீா் தேக்கம் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படாத வகையில் அரசுத்துறை அலுவலா்கள் பாா்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடப்பட்டு மாநகரில் சூழற்சி முறையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது கேட்டறிந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில் மாநகராட்சி 15வது வார்டுக்குட்பட்ட நியூ சுந்தரம் நகர் குடியிருப்பு பகுதியில் கனமழையால் தேங்கிய வெள்ள நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியை அமைச்சா் கீதாஜீவன் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் பொன் பெருமாள், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பாக முகவர் ஞான பிரகாசம் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உள்பட பலா் உடனிருந்தனா்
