தூத்துக்குடி :தொடர் கதையாகும் போக்குவரத்து நெரிசல் - 2ம் கேட் முதல் கருத்த பாலம் வரையிலான சாலையை "ஒரு வழிப் பாதையாக" மாற்றிட காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள்.!
தூத்துக்குடியில் தினம் தினம் போக்குவரத்து நெரிசலால் தினறும் 2ம் கேட் முதல் கருத்த பாலம் வரையிலான சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றிட மாவட்ட காவல்துறைக்கு பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட 2ம் இரயில்வே கேட் சந்திப்பில் இருந்து கருத்தபாலம் வரை செல்லும சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறுகிய சாலையான இதில் SR மருத்துவமனை மற்றும் ரெங்கநாதன் மருததுவமனைகள் உள்பபட பிரபல திருமண மணடபமுமான அபிராமி மஹாலும் உள்ளது. மேற்படி சாலை குறுகலாகி மேல் பகுதியில் விரிந்து கொள்வதால் வாகன போக்குவரத்தில் பெரிதும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரயில்வே கேட் மூடபட்டால் குறுகலான பாதையை பயன்படுத்த முடியாத நெருக்கடியும் தொடர்கிறது. இதில் மினி பேருநது உள்ப்பட கனரக வாகனங்களும் இந்த வழித்தடத்தை போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்வதால் இசசாலையில் கூடுதல் நெருக்கடிகளை பொதுமக்கள் நித்தம் சந்திக்கின்றனர். மருத்துவ தேவைக்கான அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் முதல் ஆட்டோ வரை இச்சாலையை கடப்பதில் ஏற்படும் சிரமம் சொல்லி மாளாது.
ஆகையால், 2ம் கேட் முதல் கருத்த பாலம் வரையிலான மாநகர பிரதான சாலையான இந்த வழித்தடத்தை "ஒரு வழிப் பாதையாக" மாற்றி அமைத்திட வழி வகை செய்து உதவிடுமாறு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு வழிப் பாதையின் மாற்று சாலையாக "கருத்தப் பாலம் வழியே பக்கிள் ஓடை வழித்தடத்தை" பத்திரகாளியம்மன் கோவில் வரையில் பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சியுடைய சிமெண்ட் (ஸ்மார்ட் சிட்டி) சாலையை தார் சாலையாக புதுப்பித்து தரும்படியும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் "இந்த கோரிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர மேயர், ஆணையாளர் ஆகியோர் விரைவில் செயல்படுத்தி தந்தால் புதிய பேருந்துநிலைய பயன்பாட்டிற்குரிய மாநகரின் பிரதான சாலை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க வழி பிறக்கும். இச்சாலையின் பயன்பாட்டை பொதுமக்களும் அச்சம் இன்றி பயன்படுத்த வழி கிடைக்கும் என்பதை மனதில் கொண்டு "ஒரு வழிப்பாதை" யை உருவாக்கிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
வேண்டுகோளை காவல்துறையும், மாநகராட்சி மேயரும், ஆணையாளரும் செயல்படுத்துவார்களா?


