தூத்துக்குடியில் 75 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் ஒளிரும் தெப்பக்குளம் சீரமைக்கும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு.!
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தெப்பகுளம் ஓவ்வொரு ஆண்டும் தெப்பத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். தெப்பக்குளம் நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு கோரிக்கை வைத்தனர் அப்பொழுது பொதுமக்களிடம் நவீன வசதிகளுடன் தெப்பக்குளம் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதனடிப்படையில் தற்போது தெப்பக்குளம் பல்வேறு வசதிகளுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது தெப்பக்குளம் 15 அடி ஆழம் உள்ளது மழை நீர் தெப்பத்தில் இருந்த நீர் சுகாதாரமற்ற நீராக மாறியதால் தெப்பத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்ற மேயா் ஜெகன் பொியசாமி முடிவு செய்து அதற்கான பணி ஆரம்பமானது இதுவரை சுமார் 8 அடி ஆழத்திற்கு தெப்பத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டுள்ளது தொடர்ந்து நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு மேயா் ஜெகன் பொியசாமி முறைப்படுத்த அரசு அலுவலா்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தாா்.
அப்போது மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் சுமார் 20 வருடங்களாக தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் பராமரிப்பின்றி இருந்தது பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தற்போது முழு அளவில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய வசதிகள் அமைக்கப்பட உள்ளது தெப்பத்தில் உள்ள நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக நீர் தெப்பத்தில் ஏற்றம் செய்யப்படும் தெப்பம் முழுவதும் கிரானைட் கல் பதிக்கப்படுகிறது தெப்பத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கிரில் சில அடி உயரம் உயர்த்தப்பட உள்ளது சிறு குழந்தைகள் பொழுதுபோக்கும் வகையில் சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் சறுக்குகள் ஊஞ்சல் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட உள்ளது மேலும் பொதுமக்கள் அமர்வதற்கு கிரானைட் கல் அமைத்து அமரும் வசதி செய்யப்பட உள்ளது.
மேலும் இயற்கையான முறையில் தமிழகத்தில் எங்கும் அமைக்கப்படாத வகையில் நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது மேலும் தெப்பம் முழுவதும் இரவைப் பகலாக்கும் வகையில் மின்விளக்குகள் அந்தப் பகுதி முழுவதும் புதியதாக அமைக்கப்பட உள்ளது ஆன்மீக தளம் மிகுந்த பகுதியில் அமைக்கப்படுவது எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் இருக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு வசதிகளுடன் கூடிய தெப்பக்குளம் 75 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது பணிகள் எல்லாம் முழுவதும் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் பொழுது தூத்துக்குடி மாநகரில் மீண்டும் ஒரு மகுடம் சூட்டும் இடமாக தெப்பக்குளம் அமையும் என்று மேயர் ஜெகன் பொியசாமி கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார் வட்டச் செயலாளர் ரவீந்திரன் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமாா் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்பட பலா் உடன் இருந்தனர்.

