கருப்பு உளுந்து குவிண்டாலுக்கு 7800க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் (NCCF) இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அறிக்கை.!
தூத்துக்குடி : கருப்பு உளுந்து கொள்முதல் குவிண்டாலுக்கு ₹7,800-க்கு கொள்முதல் செய்கிறது மத்திய அரசின் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய அரசு நிறுவனம் சார்பில் சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள மாநில அளவிலான அலுவலக மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆத்மா நிர்பர் கிரிஷி திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளிடமிருந்து கருப்பு உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டாலுக்கு ரூ7,800-க்கு கொள்முதல் செய்கிறது. முதன்மை வேளாண் கடன் கழகம் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளின் விவரங்களை சம்யுக்தி தளத்தின் மூலம் உடனடியாக பதிவு செய்யலாம்.
என்சிசிஎப் கொள்முதல் செய்வதற்கான மாநில அளவிலான நிறுவனம். சம்யுக்தி தளத்தில் விவசாயிகளின், சரியான ஆவனங்களைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நில உரிமம் பயிர் விதைப்பு சான்றிதழ் ஆகியவற்றை அடிப்படை ஆவனங்களாக கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
100 சதவீதம் கட்டண உத்தரவாதம் மற்றும் டிபிடி வழியாக விவசாயிகளின் கணக்குகளில் நேரடி நிதி செல்லுதப்படும். கொள்முதல் திட்டம் மற்றும் உளுந்து அறுவடை காலம் முடிவு வரை கொள்முதல் மையம் திறந்திருக்கும். சம்யுக்தி போர்ட்டலில் பதிவு செய்ய, நீங்கள் என்சிசிஎப் கொள்முதல் மையம் அல்லது மாவட்ட வேளாண் அலுவலகத்தைப் தொடர்பு கொள்ளவும் அல்லது wonwneef-india.com தளத்தைப் பார்வையிடவும் அல்லது கட்டணமில்லா உதவி எண்ணை அழைக்கவும்: 7065085783 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

