"இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது" - தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில மாநாட்டில் திருமாவளவன் பேச்சு.!

 


இடைக்கால தேவைக்காக அணி மாறிவிட முடியாது. இடதுசாரிகள் தெளிவாக, துணிவாக இருப்போம். இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந்து விடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது என்று திருமாவளவன் எம்பி பேசினார்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 12வது மாநில மாநாடு, தூத்துக்குடியில் நேற்று தொடங்கியது. மாநில செயலாளர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் சங்கர் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக பொதுச் செயலாளர் திபங்கர் பங்கேற்றார்.

மாநாட்டில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசும் போது, பாஜ ஒவ்வொரு சமூகத்தையும், தனித்தனியாக, மதம் சார்ந்த முறையில் அணுகுகிறார்கள். அவர்கள் மதுரையில் நெசவாளர்களுக்காக போராடவில்லை. தொழில் வளத்தை கொண்டு வர போராட வில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடவில்லை. கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடுகிறார்கள், மக்க ளின் உணர்ச்சியை தூண்டி விட்டு ஒருங்கிணைக்க பார்க்கிறார்கள். ஓபிசி இட ஒதுக்கீடுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தினார்கள். ஓபிசி தலைவர்கள் பாஜ இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி, அந்த கட்சியை ஆதரிக்க கூடாது என்று சிந்திக்கிறார்களா?. இந்த தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது, தொடர்ந்து எப்படி அதிகாரத்தில் இருப்பது என்றுதான் கணக்கு பார்க்கிறார்கள்.

கூடுதலாக இடங்கள் வேண்டாமா என்று எங்களை பார்த்து கேட்கிறார்கள். இடதுசாரி கூட்டணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 4. 5 இடங்கள் தருகிறார்கள். இது போதுமா என்று நம்மிடம் ஆசை காட்டுகிறார்கள் கூடுதலாக இடம் பெறலாமே, அங்கு தொடர்ந்து வெற்றியும் பெறலாமே, இப்படி தற்காலிக அரசியல் வெற்றிகளுக்கு, வலதுசாரி களை ஒபிசி தலைவர்கள் சிவப்பு கம்பளம் விரித்து தமிழகத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். அதிமுக அந்த துரோ கத்தை செய்கிறது. அந்த கூட்டணியில் உள்ள கட் சிகள் அந்த துரோகத்தை செய்கின்றனர். தமிழகத் தில்தான் அவர்களால் காலூன்ற முடியாத நிலை இருந்தது.

பாஜவுடன் சேர்ந்தால் அவமானம் என்ற உளவியலை கட்டமைத்து இருந்தோம். அதனை மெல்ல மெல்ல நீர்த்து போகச் செய்யும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழலில் இடதுசாரிகள் மிகவும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இடதுசாரி அரசியல் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நிற்பது அல்ல. அது விரிவுபடுத்தப்பட வேண்டிய ஒன்று.திராவிட இயக்கங்களையும், அம்பேத்கர் இயக் கங்களையும் இணைத்து செயல்படவேண்டும். இடதுசாரி தேசிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். இடதுசாரி அரசியலை மக்களிடம் எந்த அளவுக்கு கொண்டு சென்று சேர்த்தோம் என்பதுதான் சுட்சி தொடங்கிய உடனேயே நான் முதல்-அமைச்சர் என கூறிக் கொண்டு இன்று பலபேர் வந்து உள்ளனர். அவர்களுக்குதான் வாய்ப்பு இருக்கிறது என ஊடகங்கள் உயர்த்தி பிடிக்கின்றன. அதுதான் காற்றடிக்கும் திசை என பல பேர் அங்கு தாவுகிறார்கள் அந்த சதி அரசியலை முறியடிக்க வேண்டும். அது வலதுசாரி அரசியலுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கையாகவே இருக்கிறது. திமுக மீதும், அரசு மீதும் எங்களுக்கு விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்களோடு தான் கூட்டணியை, உறவை, நட்பை போற்றுகிறோம். ஆனால், வலது சாரிகளுக்கு இங்கே சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது. வலதுசாரிகளுக்கு துணை போகிற கும்பலை ஆதரிக்க முடியாது. ஒரு இடைக்கால தேவைக்காக அணி மாறி விடமுடியாது. இடதுசாரிகள் தெளிவாக, துணிவாக இருப்போம். இணைந்தே நிற்போம். வலதுசாரி அரசியலை வீழ்த்தும் வரை ஓய்ந் துவிடக்கூடாது. சோர்ந்து விடக்கூடாது என்றார்.

பிரிவினை சதியை முறியடிப்போம்'

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் பாஜவின் முயற் சியை, சதியை முறியடிக்க நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

கருத்தியல் போருக்கு தயாராக வேண்டும்"

இந்திய ந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண் டியன் பேசியதாவது: வாக்குரிமை பறிப்பு என்பதை ஆழமாக சிந்தித்தால் குடியுரிமை பறிப் பாகும். திருப்பரங்குன்றம் என்கிறார்கள், வந்தே மாதரம் என்கிறார்கள். நாட்டின் ஒன்றுமையை, மதச்சார்பின்மையை சிதைக்க நினைக்கிறார்கள். பல நூறு ஆர்எஸ்எஸ், பாஜ சேர்ந்து வந்தா லும் தமிழகத்தின் ஒற்றுமையை, இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது. நீதிபதியாக இருந்தாலும், ஆளுநராக இருந்தாலும் அவர்கள் மக்களின் பணியாளர் தான். சாதி, மதம், மொழி தொடர்பான தீர்ப்புகளில் நீதிபதிகள் நல்லிணக் கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தியாவில் ஓராயிரம் மதங்கள் இருக் கின்றன. ஆனால் இந்தியாவுக்கு என ஒருமதம் கிடையாது. மதச்சார்பின்மையை சிதைக்க பார்க்கிறார்கள். கம்யூனிஸ்டுகள், ஜனநாயக முற் போக்கு சக்திகள் இருக்கும் வரை அது நடக்காது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஒரு போரை தொடங்கி வைத்துள்ளார்.

அது ஜனநாயகத்துக்கான போர். ஒரு முதல்வர், மாநிலத்தின் கட்சிகள் தேசியத்தை வளர்க்கின்றன. ஆனால் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாட்டின் ஒற்றுமையை, தேசியத்தை சிதைக்கிறார்கள். மதத்தின் பெயரால் பாஜ தொடங்கியிருக்கிற போரை சமாளிப்பது பெரும் சவால். அந்த கருத்தியல் போருக்கு நாம் தயா ராக வேண்டும்.விரைவில் மானுடம் வெல்லும், சோசலிசம் வெல்லும், இந்தியாவின் ஒற்றுமை வெல்லும், என்றார்.

மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் சண்முகம், மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் திருச்சி செழியன், மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பாலசுந்த ரம், பாலசுப்பிரமணியன், சந்திரமோகன் ஆகியோர் பேசினர்.

மாநாட்டில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் சுரேஷ் குமார். ஜெயக்குமார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கணேசன், மண்டல செயலாளர் தமிழினியன். மண்டல துணை செயலாளர் வழக்கறிஞர் அர்ஜூன், மார்க்சிஸ்ட் கம்யூ மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூ மாவட்ட செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் முரு கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!