"தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகளை சீர் செய்ய வேண்டும்" - மேயரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய வேண்டும் என்று மேயரிடம் வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து, நுழைவு வாயிலில் வாகனம் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தி தருமாறு மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் மேயர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் வாரியர், மாநகராட்சி வழக்கறிஞர் தொல்காப்பியன், துணை தலைவர் சிவசங்கர், பொருளாளர் கணேசன், துணை செயலாளர் பாலகுமார், செந்தமிழ் செல்வி, ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்
