காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் உத்தரவு: அரசுக்கு நன்றி தெரிவிக்க வந்த சமூக ஆர்வலரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசாரால் பரபரப்பு.!
காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசாரால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தற்போது அமலில் உள்ளது, இதில் பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இந்தத் திட்டம் மது பாட்டில்கள் சாலைகளில் சிதறிக் கிடப்பதைத் தடுக்கவும், கால்நடைகளுக்கு ஏற்படும் காயங்களைத் தவிர்க்கவும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன். அரசு அறிவித்துள்ள காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் உத்தரவு தனக்கு கிடைத்த வெற்றி என்று கூறி, அரசுக்கு நன்றி தெரிவித்து கழுத்தில் ரோஜாப்பூ மாலை அணிந்து கொண்டு, விழிப்புணர்வு வாகனத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர் வந்த வாகனத்தையும் கைப்பற்றினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
