தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் மொட்டை மாடியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா திடீர் ஆய்வு.!

 

தூத்துக்குடி பழைய மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாம் முடிவடைந்த பின்பு திடீரென்று அங்கிருந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் இரண்டு மாடி ஏறி மொட்டை மாடிக்கு சென்றனர். 

மேயரும் ஆணையரும் மழையின் போது குடை பிடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றதையடுத்து அதிகாரிகளும் பணியாளர்களும் உடனடியாக பின் தொடர்ந்து ஓடினார்கள். மொட்டை மாடிக்கு ஏறியவுடன் அதனை பார்வையிட்ட மேயர் ஜெகன் பொியசாமி மொட்டை மாடி ஒரு பகுதியில் சிறிய அளவில் ஒரு மரம் வளர்ந்துள்ளது உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இதனை ஏன் அப்புறப்படுத்தாமல் வைத்திருந்தீர்கள் என்று அங்கு இருந்த அதிகாரிகள் பணியாளர்களிடம் கூறினாா். 

அதுபோல மொட்டை மாடியில் பழைய பைப்புகள் போடப்பட்டுள்ளது இந்த பைப்புகள் எல்லாம் இங்கு ஏன் வந்தது உடனடியாக இதனை இங்கிருந்து அப்புறப்படுத்தி மாநகராட்சி குடோனில் கொண்டு வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் மொட்டை மாடியில் சில இடங்களில் மழைநீர் தேங்கி கீழே தண்ணீர் இறங்குவதை கண்டறிந்து உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் எந்தெந்த பகுதிகளில் மழை நீர் லீக்கேஜ் உள்ளதோ அந்தப் பகுதிகளை முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் ப்ரியங்கா உத்தரவிட்டனர். 

கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு வந்த மேயர் ஜெகன் பொியசாமி ஆணையர் ப்ரியங்கா மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் யாரும் எதிர்பாக்காத நிலையில் திடீரென்று மொட்டை மாடிக்கு சென்று ஆய்வு செய்தது அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதிகாரிகள் பணியாளர்கள் மத்தியில் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் மாநகராட்சி அலுவலகங்கள் கட்டிடங்கள் முழுமையாக 100% பாதுகாக்க வேண்டும் அது அந்தந்த பகுதி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பணியாளர்களின் கடமையாகும் இதனை நீங்கள் சரி செய்ய வேண்டும் திடீரென்று மீண்டும் நான் மொட்டை மாடிக்கு வந்து பார்வையிட வருவேன் அப்போது சுத்தமாகவும் குறைகளை சரி செய்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆய்வின்போது உதவிஆணையர் வெங்கட்ராமன், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் வேலாயுதம்,  உதவி செயற்பொறியாளர் ராஜேஷ்கண்ணா, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், இளநிலை பொறியாளர் பாண்டி, உதவி பொறியாளர்கள் ஹரிஹரன், நித்தியகல்யாணி, அனுசௌந்தர்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரண்பிரசாத், பிரின்ஸ் பிரதீப், ஆனந்தஜோதி, கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, மும்தாஜ், தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரியகீதா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் உடனிருந்தனா்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!