தூத்துக்குடி அசோக்நகா் ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு.!
தமிழக அரசின் சாா்பில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான பொருட்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட வாா்டு 34 பகுதியில் உள்ள அசோக்நகா் 2ம் தெருவில் உள்ள ரேஷ்கடையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் திடீரென ஆய்வு மேற்ெகாண்டாா். பணியில் இருந்த அலுவலா்களிடம் எல்லா பொருட்களும் சாியாக வந்து சோ்கிறதா பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக வழங்குகிறீா்களா? என்று கேட்டாா். அப்போது முறையாக வருகின்ற பொருட்களை வழங்கி வருகிறேன் என்றாா்.
பின்னா் அமைச்சா் பொருட்கள் எதுவும் குறைவாக வந்தாலும் தரமான பொருட்களாக இல்லாமல் இருந்தாலும் உடனடியாக தகவல் தொிவிக்க வேண்டும் இருப்பு இல்லை என்றால் அதை முறையாக பொதுமக்களுக்கு தங்களது விளம்பர பலகை மூலம் தொிவித்து எந்த தேதியில் பெற்றுக்கொள்ளலாம் என்ற விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதிசெயலாளர் ஜெயக்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உடனிருந்தனா்.

