SSN பொறியியல் கல்லூரிக்கு பூட்டு - இனி நோ அட்மிஷன்; தற்போது படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? :நிர்வாகம் விளக்கம்.!

 

தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி (SSN College of Engineering), வரும் 2026-27 கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இக்கல்லூரி படிப்படியாக மூடப்பட்டு, அதன் அருகிலேயே இயங்கி வரும் ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்துடன் (Shiv Nadar University Chennai - SNUC) இணைக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (AICTE) இதற்கான அனுமதியை வழங்கியுள்ளன. 2026-27 கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் புதிய மாணவர்கள் யாரும் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனி பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 'எஸ்.எஸ்.என் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்' (SSN School of Engineering) பிரிவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் (SSN) பொறியியல் கல்லூரி, வரும் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் (AICTE) இதற்கான முறையான அனுமதியை கல்லூரி நிர்வாகம் பெற்றுள்ளது.

தற்போது செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியானது, அதன் அருகிலேயே அமைந்துள்ள 'சிவ நாடார் பல்கலைக்கழகத்துடன்' (Shiv Nadar University Chennai - SNUC) படிப்படியாக இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 'எஸ்.எஸ்.என் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங்' பிரிவிற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் சுமார் 4,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களின் நலன் கருதி இந்தக் கல்வி நிறுவனம் 'படிப்படியாக' (Progressive Closure) மூடப்படும். அதாவது, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களின் படிப்பை முடிக்கும் வரை அதே கல்லூரியில் தொடரலாம். அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே பட்டங்கள் வழங்கப்படும்.

மேலும், தற்போதைய மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை பணியில் தொடருவார்கள் என்றும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்திலேயே மாற்றமிருக்காது என்றும் கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஒருவேளை மாணவர்கள் அரியர் (Arrears) வைத்திருந்தால், அவர்கள் அண்ணா பல்கலைக்கழக விதிகளின்படியே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதுவரை எஸ்.எஸ்.என் கல்லூரியில் 65 சதவீத இடங்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டு வந்தன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 55,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

ஆனால், இனி சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால், இதற்கான நடைமுறைகள் மாறுகின்றன. புதிய சேர்க்கைக்கு மாணவர்கள் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் எதிர்கொள்ள வேண்டும். மேலும், சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (B.Tech) படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் ஆண்டுக்கு சுமார் 3.5 லட்சம் ரூபாயாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பல்கலைக்கழக அந்தஸ்துடன் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது கல்லூரியில் பயின்று வரும் 4,800-க்கும் மேற்பட்ட (UG, PG மற்றும் ஆராய்ச்சி) மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இவர்களுக்கான படிப்புகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் விதிமுறைப்படியே தொடரும். இவர்கள் படிப்பை முடிக்கும்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டத்தையே பெறுவார்கள்.

தற்போதுள்ள மாணவர்கள் அனைவரும் படிப்பை முடிக்கும் வரை அதே பேராசிரியர்கள் பாடங்களை நடத்துவார்கள். ஒருவேளை மாணவர்கள் அரியர் (Arrears) வைத்திருந்தாலும், அவர்கள் அண்ணா பல்கலைக்கழக விதிமுறைப்படியே தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!