ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்கம்  செயலாளர் கே.கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் விலை கூடுதலைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கூடுதல் கட்டணம் அதிகமாக நிர்ணயித்து, பொதுமக்கள், பயணிகளிடம் வசூல் செய்கிறார்கள்.

உதாரணமாக, சென்னை, மைசூரு இரயில் வரும் நேரங்களில் மேலூர் இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல, ஒரு நபருக்கு ₹50/- வீதம், ஷேர் ஆட்டோ (Share Auto) போல வசூல் செய்கிறார்கள்.

அதேபோன்று தைப்பூசம் போன்ற விழா காலங்களில் திருச்செந்தூர் கோவிலிலிருந்து பேருந்து நிலையம் செல்ல ஒரு நடைக்கு ₹200/- வீதம் வசூலிக்கிறார்கள். இதே நடைமுறைதான் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலவுகிறது.

மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அதிக சவாரிகள் கிடைக்கும், பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். தயவுசெய்து இதுவிஷயத்தில் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி