Posts

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

Image
  திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூரை ஒட்டி உள்ள மங்களம், காளிபாளையம், முதலிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம்,மேற்குபதி, பட்டம்பாளையம்,பெருமாநல்லூர், பொங்குபாளையம், சொக்கனூர், தொரவலூர், வள்ளிபுரம் ஆகிய ஊராட்சிகளில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வே.கனகராஜ் தலைமையில் நடந்த இந்த கிராம சபை கூட்டங்களில் 2800 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டங்களில் கிராம வளர்ச்சி குறித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஜல் சக்தி அபியான் திட்ட செல்போன் செயலியில் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூங்காவை குப்பை சேகரிக்கும் மையமாக மாற்றிய சீர்காழி நகராட்சி

Image
பூங்காவை குப்பை சேகரிக்கும் மையமாக மாற்றிய சீர்காழி நகராட்சி! நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி நகரத்தில் கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான 'முருகன் பூங்கா' உள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் பூங்காவாக பயன்படுத்தி கொள்ள பொன்னுசாமி பிள்ளை என்பவர் 1954-ஆம் ஆண்டு நன்கொடையாக வழங்கினார். அதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பூங்கா செயல்பட்டு வந்தது. இந்த பூங்கா கட்டிடத்தின் பெயராக பொன்னுசாமி நிலையம் என்று வைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வாசக சாலை செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் படிப்பதற்காக பூங்கா திறக்கப்பட்டு காலை மாலை நாளிதழ்கள் போடப்பட்டு வந்தது. பொது வானொலி பெட்டியும் பூங்காவில் ஒலிப்பரப்ப பட்டு வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப் படாமல் பூட்டப்பட்டு உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு சோழ நாட்டு திருப்பணிகள் திட்டத்தின் கீழ் பல லட்சம் செலவில் பூங்கா சீரமைக்கப்பட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டது. ஒப்பந்தக்காரருக்கு பில் வழங்கப்பட்டதோடு சரி பூங்காவை திறக்காமல் மூடியே வைத்தார்கள். அதன் பிறகு கடந்த 5 ஆண...

திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Image
  திட்டக்குடியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பாசார் பெருமாள் கோவிலில் உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திட்டக்குடி அடுத்த பாசார் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. திருமஞ்சனம் ஸ்ரீகிருஷ்ணருக்கு சங்கு, பால் ,பூஜை, ஊஞ்சல் உற்சவம் வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை உரியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

உளவுப் பிரிவு தகவல் : தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் உஷார்

Image
  உளவுப் பிரிவு தகவலை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது உளவுப்பிரிவு தகவலையடுத்து நேற்று இரவு முதல் (22. 08. 2019) தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர், புதுக்கோட்டை, புதூர் பாண்டியபுரம், சவலாப்பேரி கயத்தாறு, கோடங்கிபட்டி ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்   மேற்படி 6 சோதனை சாவடிகளில் வாகனங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரும் செல்கின்றனரா, ஆயுதங்கள் போன்ற சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு செல்கின்றனரா என சுமார் 1500க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் சோதனை செய்துள்ளனர். தொடர்ந்து வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உட் கோட்டங்களிலும் அந்தந்த காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் 112 தங்கும் விடுதிகளை சோதனையிட்டு தங்கியுள்ளவர்களின் விவரங்களையும் சேகர...

திருச்செந்தூர் அருகே 294 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசாருக்கு S.P. அருண் பாலகோபாலன் பாராட்டு

Image
  திருச்செந்தூர் அருகே 294 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரை  S.P. அருண் பாலகோபாலன் பாராட்டினார்   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அதிகாலை 3 மணிக்கு ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார்  காவலர்கள் சோமசுந்தம் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் ஆத்தூரிலிருந்து சேர்ந்த பூமங்கலம் ரோட்டில் வி.வி மினரல் கம்பெனி அருகில் ரோந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே  சந்தேகத்திற்கிடமான முறையில் 180 மில்லி அளவு கொண்ட காலி குவார்ட்டர் பாட்டில்களை பிளாஸ்டிக் டிரேயில் வைத்து ஏற்றிக் கொண்டு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த TN 04 AK 4762 TATA ACE வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மறித்து  சோதனை செய்தனர்.     இதில் குவார்ட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள டிரேகளுக்கு நடுவில் பச்சைக் கலர் 10 எண்ணம் பாலிதீன் கவர் மூட்டைகள் இருந்ததை கவனித்த போலீசார்  அந்த மூட்டைகளை பிரித்துப்பார்த்ததில் ஒவ்வொன்றிலும் 10க்கும் மேற்பட்ட காக்கி டேப் சுற்றப்பட்ட பொட்டலங்கள் இருந்தது,  அதை பிரித்துப் பார்த்ததில்  விதைகளுடன் ...

தூத்துக்குடி : ரசாயன ஆலை வெளியேற்றிய கழிவு நீரை குடித்த மாடு பலி

Image
  தூத்துக்குடியில் ரசாயன ஆலை வெளியேற்றிய கழிவு நீர் ஓடையில் கலந்ததால் அதனை  குடித்த மாடு பலியானது தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையான V.V. டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ஆலையின் கழிவு நீரை குடித்ததால் மாடு உயிரிழந்ததாக புகார், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை. தூத்துக்குடி குமரெட்டியாபுரம் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சண்முகராஜ் (37). தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் நான் எருமை மாடுகளை வைத்து பால் கறந்து பிழைப்பு நடத்தி வருகிறேன், தினமும் காலை 8 மணிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று மாலை 6 மணிக்கு வீட்டுக்கு அழைத்துச் செல்வேன், இந்நிலையில் இன்று (21.08.2019 ) வி.வி.டைட்டானியம் பிக்மென்ட்ஸ் ரசாயன ஆலைக்கு முன்பு உள்ள ஓடையில் கிடந்த தண்ணீரை குடித்த மாடு சிறிது நேரத்தில் எனது கண்னெதிரேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டது, ஆலையில் திறந்து விட்ட ரசாயன தண்ணீர் ஓடையில் கலந்ததே மாடு இறக்க காரணம் என புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது, புகாரின் பேரில் சிப்காட்...

ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது -  உயர்நீதிமன்றத்தில் சி.பி.எம்.தரப்பு வழக்கறிஞர் வாதம்

Image
  ஸ்டெர்லைட் திறக்கப்படுவதால் சமூகத்தின் வளர்ச்சி மேம்படும் என்று கூறுவது அபத்தமானது- ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சி.பி.எம்.தரப்பு வழக்கறிஞர் வாதம்   தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக் கப்பட்டது, வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் டிசம்பர் 15 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.   அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி க...