Posts

தமிழகத்தில் இன்று 66 பேருக்கு கொரோனா.. இன்னும் 835 பேர்தான் ஆஸ்பத்திரில இருக்காங்க... 960 பேர் வீட்டுக்கு சென்றனர்

Image
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:  சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வண்ணம் புதிய முறையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த ஒத்துழைப்பு தந்தமைப்பு நன்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 835 பேர் மட்டும் தான். மொத்தமாக இன்று 7,707 பேருக்கு சோதனை செய்து இருக்கிறோம். இதுவரை 80,110 மாதிரிகள் சோதனை செய்து இருக்கிறது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 66 பேர், ஆண்கள் 38 பேர்: பெண்கள் 28 பேர்.மொத்த கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்து உள்ளது. 41 பரிசோதனை மையங்கள் வைத்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பரிசோதனை செய்ய முடியும்.  இன்று மட்டும் 94 பேர் குணமைடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதுவரை 960 பேர் பூரண குணமடைந்துள்ளனர். மத்திய குழுவே நம்மை பாராட்டி உள்ளனர். சிகிச்சையில் மீள்பவர்கள் விகிதம் 52 சதவீதமாக உள்ளது. பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் விழுக்காடு அதிகரித்துள்ளது. சென்னை குன்றத்தூரை சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளனர். சென்னையில் 43 காஞ்சி 7 தென்காசி 5, செங...

5000 குடும்பங்களுக்கு 5கிலோ அரிசி அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

Image
குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் குடியாத்தம் தமிழ் நாடு அரசு போக்குவர்த்து டிப்போ எதிரில் உள்ள மகாலட்சுமி மெட்டல் ராஜமாணிக்கம் திருமண மண்டபத்தில் குடியாத்தம் நகர கழக செயலாளர் ஜெ.கே.என்.பழனி  அவர்களின் தலைமையில், கழக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர்களின் பங்களிப்போடு குடியாத்தம் நகரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசின் ஊரடங்கு உத்தரவால் தொழில்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்கள் 5கிலோ அரிசியினை வழங்கினார்.கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.லோகநாதன், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஒன்றிய செயலாளர் டி.சிவா, நகர கழக துணை செயலாளர் ஆர்.மூர்த்தி, வேலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருமான கே.சி.வீரமணி மற்றும் குடியாத்தம் நகர கழக செயலாளர்  ஜே.கே.என்.பழனி ஆகியோரின் சொந்த செலவில் (24.4.2020) முதல் ஊரடங்கு உத்தரவு முடியும் மே 3 ம்தேதி வரை குடியாத்தம் நகரில் செயல்படும் அம்மா...

ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு!

Image
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவருடைய வீட்டில் ஆடு ஒன்று வளர்த்து வருகின்றார்.  அந்த ஆடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நான்கு குட்டிகளை ஈன்றது.   பிறந்த சில நாட்கள் மட்டுமே குட்டிகளுக்கு பால் ஊட்டிய ஆடு, அதன் பிறகு பால் சுரக்காததால் பாலூட்ட முடியவில்லை. இதனால் பால் கிடைக்காமல் பசியோடு இருந்த நான்கு ஆட்டுக்குட்டிகளும் அதே வீட்டில் இருந்த பசுமாட்டின் மடியில்  பால் குடித்து உள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பசுமாடு தினந்தோறும் ஆட்டுக்குட்டிகளுக்கு பாலூட்டுவதை வழக்கமாக்கிக் கொண்டது. காலையில் மேய்ச்சலுக்கு செல்லும் முன் ஆட்டுக்குட்டிகளுக்கு பால் கொடுப்பதும், மாலை மேய்ச்சலுக்கு சென்று வந்த பிறகு நேராக ஆட்டுக்குட்டிகள் இருக்கும் இடத்திற்கு செல்லும் பசுமாடு,  நான்கு ஆட்டுக்குட்டிகளுக்கும் பாலூட்டி விட்டுதான் அதன் இருப்பிடத்திற்கு செல்லுகின்றது. பசுமாடு தனது கன்றுக்குட்டியை விட ஆட்டுக்குட்டிகளுக்கு பாசத்தோடு பாலூட்டுவதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

பழனி திருக்கோயில் யானை கஸ்தூரிக்கு உடல் பரிசோதனை

Image
பழனி திருக்கோயில் யானை கஸ்தூரிக்கு உடல் பரிசோதனை நடைபெற்றது.     பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான கஸ்தூரி யானை தேவஸ்தான நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கஸ்தூரி யானை திருவிழா காலங்களில் மக்களின் முன்னிலையில் பட்டாடை பொருத்தப்பட்டு அழகாக வளரச் செய்கின்றனர். தமிழகம் முழுவதும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் கொரோனோ தொற்று ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் கஸ்தூரி யானைக்கு கொரோனோ நோய் தொற்று உள்ளதா என்று மாவட்ட வன அலுவலர் வித்யா தலைமையில் மருத்துவர் குழு மூலம் கஸ்தூரிக்கு முழு உடல் பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவி இயக்குனர் சுரேஷ், மருத்துவர் முருகன், உதவியாளர் ராஜா, பழனி வனச்சரக அலுவலர் விஜயன், வனவர்  சேது ராஜன், திருக்கோயில் நிர்வாகி நெய்காரபட்டி முருகேசன், நிர்வாகி சந்திரசேகரன், மற்றும் யானை பாகன்கள் பிரசாந்த், சங்கரன் குட்டி, ஆகியோர்கள் முன்னிலையில் இந்த பரிசோதனை நடைபெற்றது.     மேலும் மாவட்ட வன அலுவலர் வித்யா கஸ்தூரி யானைக்கு கொடுக்கப்படும் உணவுகள் பற்றியும் கஸ்தூரி யானை பராமரிக்கப்படும் விதங்கள் பற்றியும்...

நாம் தமிழர் கட்சி சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்

Image
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பில் ஊரடங்கு நிவாரணமாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. திருப்பூர் கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊராடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையிலிருந்து நாள் தோறும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு இல்லாமல் இருந்தவர்களுக்கு உணவு  வழங்கி வந்தனர். அதுபோல் இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு பகுதி சார்பில் அண்ணாநகர் குமரன் காலனி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நாம் தமிழர் வடக்கு தொகுதி சார்பில் கொரோனா ஊராடங்கு நிவாரணமாக 100 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கினர். இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் கெளரிசங்கர், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடாச்சலம், தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ், தொகுதி இணை செயலாளர் ஜெரால்ட் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

குடியாத்தத்தில் ஏழை மக்களுக்கு எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

Image
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எஸ் ஆர் ராஜா ஸ்டிஸ் கம்பெனி தொழில் அதிபர் எஸ் ஆர் விஜயகுமார் சார்பாக கொரானா வைரஸால் 144 தடை சட்ட உத்தரவில் பாதிக்கப் பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு சுமார் 2000 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் அனைத்தும் குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதி உள்ள பொது மக்களுக்கு எஸ் ஆர் தேவகி ராஜா தொழிலதிபர் எஸ் ஆர் விஜய் குமார் சரண்யா ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார் உடன் ஜி மகாதேவன் ஹேமலதா ஜி சிவக்குமார் ஸ்ரீராம் மற்றும் எஸ் ஆர் ராஜா ஸ்டீல் கம்பெனி ஊழியர்கள் உடனிருந்தனர்.

சதுமுகை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களக்கு மளிகைபொருட்களை எம்.எல்.ஏ. எஸ்.ஈஸ்வரன்வழங்கினார்

Image
  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் ஒன்றியம் சதுமுகை ஊராட்சியில்  கொரோன வைரஸ்  நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களக்கு  அரிசி, பருப்பு,சமையல் எண்ணெய்,முட்டை ஆகிய மளிகை பொருள்களின் சமையல் தொகுப்புகளை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ,  மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.எஸ். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர்சி.என்.மாரப்பன்  சதுமுகை ஊராட்சி மன்ற தலைவர்  சத்யாசிவராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்  பிரபாகரன்,ஊராட்சி  கழக செயலாளர் என்.சிவராஜ் , ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஆர்.லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்,கிளைக் கழக உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர்  குமார் உட்பட பலர் கலந்து கொணடனர்.