நாம் தமிழர் கட்சி சார்பில் 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள்
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பில் ஊரடங்கு நிவாரணமாக 100 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பூர் கொரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் ஊராடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையிலிருந்து நாள் தோறும் நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு இல்லாமல் இருந்தவர்களுக்கு உணவு வழங்கி வந்தனர்.
அதுபோல் இன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் வடக்கு பகுதி சார்பில் அண்ணாநகர் குமரன் காலனி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நாம் தமிழர் வடக்கு தொகுதி சார்பில் கொரோனா ஊராடங்கு நிவாரணமாக 100 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வழங்கினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் கெளரிசங்கர், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட பொருளாளர் வெங்கடாச்சலம், தொகுதி செயலாளர் செந்தமிழ் செல்வராஜ், தொகுதி இணை செயலாளர் ஜெரால்ட் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.