Posts

பொதுமக்களுக்கு தினமும் கபசுர மூலிகை குடிநீர் வழங்கும் கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 

Image
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக கோபியில் வைரவிழா மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் (1991-1998)மக்கள் நலன் கருதி தினமும் தினசரி மார்க்கெட் மொடச்சூர் தான்தோன்றி அம்மன் கோவில் அருகில் கபசுர மூலிகை குடிநீர் பொதுமக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த உயிர் காக்கும் பணியை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.    

அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

Image
அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா     செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் நகரகழக தேமுதிக சார்பில் அனகாபுத்தூர் நகரகழக செயலாளர் மகாதேவன் தலைமையில் கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை செய்து, பள்ளி மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது.   அனைத்து வார்டுகளிலும் கழககொடியேற்றியும், 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.   இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் கலந்துகொண்டார். இதில் கழக நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் உட்பட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.                

திருப்பூர் மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர் சிறப்பு அங்காடி

Image
திருப்பூர் மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில் காவலர் சிறப்பு அங்காடி மற்றும் ஆவின் பாலக அங்காடி திறக்கப்பட்டது. திருப்பூர் மாநகர காவல்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக காவலர் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் 24.08.2020 இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் திருப்பூர் மாநகரம் வடக்கு காவல்நிலைய சரகத்தில் உள்ள மாநகர காவலர் குடியிருப்பு பகுதியில், ஆவின் பாலக அங்காடியை திறந்து வைத்தார். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் திரு.க.சுரேஷ்குமார் அவர்கள், சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து, திருப்பூர் மாநகரம் மற்றும் திரு.சு.செல்வகுமார் அவர்கள் தலைமையிடம், திருப்பூர் மாநகரம் முன்னிலை வகித்தனர். திரு.யு.வி.ராஜசேகர், பொது மேலாளர், ஆவின் பாலகம், திருப்பூர் மாவட்டம் கலந்து கொண்டார். இந்த காவலர் நல அங்காடியில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற பொருட்கள் கொள்முதல் விலைக்கு கிடைக்கும். மேலும் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் பாலிலிருந்து தயார்செய்யப்படும் பொருட்கள் ஆவின்பாலக அங்கா...

5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின்  மருந்துகள்... கலெக்டர் பல்லவி பல்தேவ் வழங்கினார்

Image
  தேனி மாவட்டம் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிந்த நகரம் கம்மவர் தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற, ஆரம்ப சுகாதார துறை நிகழ்ச்சியில் 5 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வைட்டமின் A  மருந்துகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று குழந்தைகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியில்  கோவிந்தநகரம் சுற்று வட்டாரபகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரில் சென்று வைட்டமின் மருந்துகளை கொடுத்து பயனடைந்தனர்.

ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில்

Image
  ஜெகதளா பேரூராட்சி அருவங்காடு ஒசாஹட்டி பகுதியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் ஒசாஹட்டியிலிருந்து பாலம் வரை சாலை மேம்படுத்தும் பணி மற்றும் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் கிணறு அமைப்பதற்கான பூமி பூஜையை அம்மா பேரவை மாவட்ட செயலாளர், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ஏ.ராமு, எம்.ஏ., துவக்கி வைத்தார்.   உடன் குன்னூர் ஒன்றிய கழக செயலாளர் பேரட்டி ராஜு ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் அவர்கள். நீலகிரி மாவட்ட துணை செயலாளர் உஷா ஜெகதளா பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் போலன் (எ) ஜெயக்குமார் ஒசாஹட்டி கிளை கழக செயலாளர்கள் சதிஷ், பிரவீன், ரமேஷ் தகவல் தொழில் நுட்ப பிரிவு கேசவன், ரெஜி லாசர் காரக்கொரை சந்திரசேகர், மோகன் ஆரோக்கியபுரம் சஜீ  ஒசாஹட்டி ஊர் தலைவர் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.

ஸ்ரீபெரும்புதூரில்  பாஜக சார்பில்  சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின்  249 ஆவது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது

Image
  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாஜக சார்பில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் இன் 249 ஆவது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஒண்டிவீரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஒண்டிவீரன் வெள்ளையர்களை எதிர்த்து போராடியதை நினைவு கூர்ந்தனர்.   இந்நிகழ்ச்சிக்கு பாஜக கட்சியின் மாநிலSC அணி பொருளாளர் தொழிலதிபர் PPGD.சங்கர் தலைமையேற்று  ஒண்டிவீரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   பாஜக காஞ்சி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி M.செல்வமணி , காஞ்சி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் TT.பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.   மேலும் சமூக ஊடக மாவட்ட பொறுப்பாளர் R.கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய துணைத்தலைவர் A.G.மணிமாறன், நகர SCஅணித்தலைவர் P.ஜெயக்குமார் மற்றும் பாஜகவினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்.            

கோபிசெட்டிபாளையத்தில் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகளை விரைவில் சீர் செய்ய வேண்டி மனு

Image
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர்  என்.ஆர்.நாகராஜன் தலைமையில்  குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகளை விரைவில் சீர் செய்ய வேண்டி மனு ஒன்றை ஆணையாளர் தாணு மூர்த்தியிடம்  வழங்கினார்.   பின்னர் செய்தியாளர்களிடம்,  மனு குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட்டணி கட்சிகள் சார்பில் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.