Posts

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Image
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், முன்னாள் கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கட்சி நிர்வாகிகள் டெக்ஸ்வெல் முத்துசாமி, தம்பி மனோகரன், மார்க்கெட் சக்திவேல், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, அட்லஸ் லோகநாதன், ஆட்டோ கோவிந்த், சலவை மணி, பொன் மருது, ராயபுரம் தாமோதரன், ஓடக்காடு தனபால், சாகுல் அமீது, வக்கீல் முருகேசன், பரமசிவம், பிரிண்டிங் நாகராஜ், கே.எஸ்.பழனி, பிரிண்டிங் சரவணன், கே.வி.ஆர்., நகர் அலெக்ஸ், குருசாமி, கறிக்கடை ராமசாமி, பழனி, செல்வம் பழனி, சத்தி, மாசாணி, சாரதா, பெயிண்டர் மனோகரன், திருநகர் சாமிநாதன், சுப்பிரமணி, திருநகர் பாலு, முத்துக்கருப்பன், நவநீதகிருஷ்ணன், மூர்த்தி,  ஜான் பாய், தங்கவேல், ரவி,, அருண், கிருஷ்ணன், போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பாளையங்கோட்டையில் நகர தொழில் வர்த்தக சங்க கலந்தாய்வு கூட்டம் விக்ரமராஜா பங்கேற்பு

Image
  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பாளையங்கோட்டை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தொழில் வர்த்தக சங்க தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள் இளங்கோ வரவேற்றுப் பேசினார். தமிழ் நாடு வணிகர்  சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.   கூட்டத்தில் நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் மாநகர தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், விநாயகம், ஸ்டீபன்,பன்னீர்செல்வ ம் வைகுண்ட ராஜா இளங்கோ, ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.      

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா

Image
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மீன் விதைப் பண்ணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா மற்றும் பவானிசாகர் மீன் பண்ணை மேம்பாட்டு பணிகள் மற்றும் ஆய்வகம் கட்டிடம் திறப்பு விழா  பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .ஈஸ்வரன் திறந்து வைத்தார்.   உடன் பவானிசாகர் பேரூராட்சி செயலாளர் வாத்தியார் துரைசாமி,அரியப்பம்பாளையம் அம்மா பேரவை செயலாளர் மிலிட்டரி சரவணன் , புங்கார்  முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் எழிழரசன்,முன்னாள் சேர்மன் வெங்கடாசலம் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.             

திருநெல்வேலி மாவட்ட அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை

Image
  திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர்  தச்சை கணேசராஜா ஆலோசனையின் பேரில் பாளை பகுதியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை பாளை பகுதி அதிமுக செயலாளர் வக்கீல் ஜெனி  வட்ட செயலாளர்களிடம் வழங்கினார்.

மனித நேயத்திற்கு மரியாதை செய்த திருநெல்வேலி மாநகர காவல்துறை... வியப்பில் ஆழ்த்திய காவல் துணை ஆணையரின் நடவடிக்கை

Image
  நெல்லை வண்ணார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் வயது 24 இவர் லேப்டாப் சர்வீஸ் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.    சம்பவத்தன்று  சுமார் இரவு 10.30 மணி அளவில் வேலையை முடித்துக்கொண்டு மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் வண்ணார்பேட்டை பகுதியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சென்றபோது அங்கு சாலையோரம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கூறிக்கொண்டிருந்தார். இதனை காமெடிதான் மணிகண்டன் அந்த மூதாட்டியை அந்த மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லை டவுனில் உள்ள அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.   டவுன் பொருட்காட்சி அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வாகன சோதனை ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்ற மணிகண்டன் வாகனத்தை நிறுத்தி அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.   அப்போது மணிகண்டன். இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவித்த   மூதாட்டிக்கு உதவி செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என போலீசாரிடம் கூறினார். எனினும் போலீ...

கடலூர் மாவட்டத்தில் பேரிடர் காலம் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Image
  கடலூர் மாவட்டம்  விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நல்லூர் , திட்டக்குடி வெலிங்டன் ஏரி,மங்களூர், தொண்டாங்குறிச்சி ஆகிய பகுதிகளில்  மாவட்ட ஆட்சியர்  சந்திரசேகர் சகாமூரி  ஆய்வு மேற்கொண்டார்.    வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் ஏற்படும் சேதங்களை சரிசெய்ய வைக்கப்பட்டுள்ள மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் கொசு மருந்து தெளிப்பான்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு தேவையான பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆய்வு மேற்கொண்டார்.    பின்னர்  விருத்தாச்சலம் வாக்கு என்னும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு சேமிப்பு கிடங்கில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர்  ஆணைக்கினங்க மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாக்கு பதிவு  இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிடங்கில் பாத்துகாப்பு மற்றும் உறுதி தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய மாநில அரசியல் கட்சியின் பிரதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி திடீர்  ஆய்வு மேற்கொண்டார்...

வெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்

Image
வெளியூர்களில் இருந்து இராமேஸ்வரம் பகுதிக்குள்  முகக்கவசம் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்தி அனுப்பினார்.      நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக  பல்வேறு கட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை  தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் இராமேஸ்வரம் கோவிலுக்கு வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மற்றும் அனைத்து வாகனங்களில் வரும் பயணிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று வாகனங்களை நிறுத்தி சுகாதாரத்துறை ஆய்வாளர் பாலா சுப்புரமணியம் தலைமையில் பாம்பன், தங்கச்சி மடம் ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்,  அப்போது முகக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் அபராதம் விதித்தும் அவர்களை எச்சரிக்கை செய்தும் அனுப்பினர்.