Posts

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 60,000 பேரிடம் வழக்குப் பதிவு - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

Image
தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக  மாவட்ட காவல்துறைக்கு இரும்பு தடுப்பு (Barricades) வேலிகள்.! தூத்துக்குடி மில்லர்புரத்தில் இயங்கி வரும் ஸ்பின்னிங் மில் சார்பாக பி.எஸ்.எஸ் ஜெயம் அன் கோ இயக்குனர் ஸ்டான்லி சாம்ராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 20 இரும்பு தடுப்பு வேலிகளை (Barricades) தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் முன்னிலையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமாரிடம் வழங்கினர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி ஸ்பின்னிங் மில் சார்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 20 இரும்புத் தடுப்பு வேலிகள் கொடுத்துள்ளதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நன்றியை தெரிவித்தார்.  தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த காலகட்டத்தில்  அனைத்து காவல் துறையினரும் முன்கள பணியாளராக தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த மூன்று மாதங்களாக முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய்...

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு.!

Image
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்  கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அமைச்சர்கள் மா சுப்பிரமணியன்,கே.என்.நேரு, ஏ.வ.வேலு,பொன்முடி, மற்றும் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது - ரூ.3 400/- பறிமுதல்.

Image
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது கொழுவைநல்லூர் பகுதியில் திருக்குமார் என்பவரது வீட்டில் கொலுவைநல்லூர் நாடார் தெருவைச் சேர்ந்த  சுவாமிநாதன் மகன் முத்துக்குமரன் (54), பாலையா மகன் பெருமாள் (65), கந்தன் மகன் மோகன்ராஜ் (47), இசக்கிமுத்து மகன் திருக்குமார் (64), பரமசிவன் மகன் பொன்காந்தி (58) மற்றும் தெற்கு ஆத்தூரைச் சேர்ந்த செய்யது புகாரி மகன் பிலால் (48), பரூக் மகன் ஆயுப்கான் (48) ஆகிய 7 பேர் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகளும், ரூபாய் 3,400/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!*

Image
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!* சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திமுகவில் இணைந்தார்.!

Image
அதிமுகவைச் சேர்ந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  திமுகவில் இணைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவராக இருப்பவர் கஸ்தூரி சுப்புராஜ். அதிமுகவை சேர்ந்தவரான இவர் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தன் உட்பட பலர் இருந்தனர்.

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

Image
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் (AICCI) நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் பொதுச் செயலாளர் மயில்வேல், சங்க துணைத் தலைவர் பாலன், இணைச் செயலாளர் சுரேஷ் குமார், சங்க முன்னாள் துணைத் தலைவர் விநாயகமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  முகாமில் சங்க உறுப்பினர்கள், தங்களது குடும்பத்தினர்கள் மற்றும் பணியாளர்கள் சேர்த்து 150 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - 4 மாவட்டங்களில் பேருந்து சேவை; மெட்ரோ ரயிலுக்கும் அனுமதி.!

Image
தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிய உள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.  23 மாவட்டங்கள்: அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் நேரத் தளர்வுகளும் கூடுதலாக கீழ்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. * தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் ...