Posts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு..!

Image
கொடநாடு விவகாரத்தால் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவைக்கு வெளியே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் ஈடுபட்டனர். சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை இன்றும் நாளையும் அதிமுக புறக்கணிப்பதாக ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு நீட் ஒழிப்பு போராளி அனிதா பெயர் சூட்ட வேண்டும்"* சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

Image

திருச்செந்தூரில் குரூப்-1-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு - ஆட்சியர் துவக்கி வைத்தார்.!

Image
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கே.டி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 1 போட்டி தேர்வுகளுக்கு பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், கலந்துகொண்டு துவக்கி வைத்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ்,  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு தயாராவதற்காக மனுக்கள் அளித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் ஜூம் செயலி மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து திருச்செந்தூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1, குரூப் 2 தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும், மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான வழிமுறைகளும், அதேபோல ஆன்லைன் வகுப்புகளும், நேரடி வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும். கொர...

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது.!*

Image
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 24-ஆம் தேதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் ஏற்கெனவே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றுவிட்டன.  மேலும் 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1-இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் A...

தலிபான் அமைப்பினர், ஆதரவாளர்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கம்.!

Image
தலிபான் தொடர்பான மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குகிறது ஃபேஸ்புக் நிறுவனம். அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் தீவரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் ஃபேஸ்புக் நடவடிக்கை.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு - சபாநாயகர் அறிவிப்பு.!

Image
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் ஆனது, செப்டம்பர் 21-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே செப்டம்பர் 13-ம் தேதி நிறைவு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று மதியம்  நடைபெற்ற தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு - தலிபான்கள் அறிவிப்பு.!

Image
ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் பெண்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்க விரும்பவில்லை என்றும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அரசு தொலைக்காட்சியில் பேசிய தலிபான் அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளார். மேலும் ஆப்கானிஸ்தானில் பெண் ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது, அவர்கள் தாங்கள் வகித்த அரசுப்பணிகளுக்கு திரும்பவேண்டும் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார். அரசின் நிர்வாக கட்டமைப்பு ஏற்பாடுகள் இன்னும் தெளிவற்றதாக இருப்பதாக தெரிவித்த அந்த அதிகாரி, எனினும் ஆட்சி என்பது இஸ்லாமிய கருத்தியலை முன்னிறுத்தியே இருக்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். தலிபான்கள் வசம் ஆட்சி சென்றதை அடுத்து, அச்சத்தால் உறைந்த ஆப்கான் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக பெண் அரசு ஊழியர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் காலி செய்யப்பட்டு அனைவரும் த...