தூத்துக்குடி விமான நிலையத்தில் 195 கோடியில் புதிய பயணிகள் முனையம் அமைக்கும் பணி : தென் மண்டல நிர்வாக இயக்குநர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.195 கோடியில் புதிய பயணிகள் முனையம், கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தென் மண்டல நிர்வாக இயக்குநர் மாதவன் துவக்கி வைத்தார் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் 3 விமானங்களும், வாரம் தோறும் பெங்களூருக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 400 முதல் 600 பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாநில அரசு சார்பில் 610.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் விமான நிலைய விரிவாக்க பணிகளை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி விமான ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 30 மீட்டர் அகலமும், 1349 மீட்டர் நீளமும் கொண்ட விமான ஓடுதளம் உள்ளது. இதனை 45 மீட்டர் அகலமும், 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும் கொண்ட ஓடுதளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பி...