Posts

தேனி மாவட்டத்தில் குடியரசு தின விழா... மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தேசியக்கொடியேற்றினார்

Image
 தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 74 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முரளீதரன், தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் உமேஷ் டோங்கரே, மற்றும் அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர்.

சீனாவிடம் 26 ரோந்துப் பகுதிகளை இழந்த இந்தியா! -ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்.!

Image
  கிழக்கு லடாக்கில், சீனாவுடனான எல்லையில் உள்ள 65 ரோந்து பகுதிகளில், 26 ரோந்து பகுதிகளை சீனாவிடம் இந்தியா இழந்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் நடந்த டிஜிபிக்கள் மாநாட்டில், லடாக் நகரின் எஸ்.பி நித்தியா தாக்கல் செய்த ஆய்வறிக்கை மூலம்தான் இந்தத் தகவல் தெரிய வந்திருக்கிறது. ரோந்துப் பணிகளை பாதுகாப்பு படைகள் முறையாகத் தொடராததே இதற்கு காரணம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை டிஜிபிக்கள் மாநாட்டில் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! சீன ராணுவத்தினர் எல்லை முழுவதும் உயர் தெளிவு திறன் கேமராக்களை பொருத்தி இருப்பதாகவும் பல இடங்களில் சோதனை சாவடிகளை நிறுவி மாறுவேடங்களில் காவலர்களை குவித்திருப்பதால் இந்திய மேய்ச்சல் காரர்களின்  நடமாட்டம் கட்டுப்படுத்தபடுவதாகவும்  அதில் கூறப்பட்டு இருக்கிறது. பிபி 15 மற்றும் 16 பகுதிகளில் சமீபத்திய மேற்கொள்ளப்பட்ட படை விலகல் நடவடிக்கை எதிரொலியாக கோக்ரா மலைகள், பேங்காக் வடக்கு கரை மற்றும் காக்சும் பகுதிகள் மேய்ச்சல் நிலங்களை இழந்துவிட்டதாகவும் கட்டுரையில் கூறப்பட்டிருக்கிறது. காரகோரம் ...

கோவில்பட்டியில் நகராட்சி பொறியாளரை வாகனத்துடன் சிறைப்பிடித்து பொது மக்கள் போராட்டம் - பரபரப்பு - பேச்சுவார்த்தை நடத்தி பொறியாளாரை மீட்ட போலீசார்.!

Image
  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு பகுதியான வேலாயுதபுரத்தில் 2வது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அப்பகுதி நகராட்சியி;ல பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதையெடுத்து நகராட்சி பொறியாளர் ரமேஷ் வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். 2வது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை, குறைவாக தான் வருவதாகவும், எனவே முதல் குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லலராஜா மற்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பொறியாளர் ரமேஷ்  அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும் கவுன்சிலரை பார்த்து நீ யார் ? என்ற கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் கவுன்சிலர் லவராஜா தலைமையில் பொறியாளர் வாகனத்தினை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மட்டுமின்றி பொறியாளருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போராட்;டத்தில் ஈட...

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் இலக்கியப் பெருவிழா - திருச்சி சிவா MP சிறப்புரை.!

Image
  கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் தருமபுரி கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் நா.ராமலட்சுமி முன்னிலையில்,   கல்லூரி முதல்வர் முனைவர்.வி.அனுராதா தலைமையில்  இலக்கியப் பெருவிழா நடைபெற்றது. எதிர்காலம் யார் கையில் ? என்கின்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவைஉறுப்பினர் திருச்சி சிவா மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.  நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், மாவட்ட அவைத் தலைவர் துணை செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்,  தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள்,  ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட ஊராட்சி குழ, ஒன்றிய குழு, பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்,  கவுன்சிலர்கள்,  அனைத்து அணிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து! - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Image
  உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் என்பது புகையிலைப் பொருட்களின் விளம்பரம் மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த மட்டுமே வழி வகை செய்கிறது. புகையிலைப் பொருட்கள் 'உணவு' என வகை செய்யப்படாததால், அதன் விற்பனையை இந்த சட்டத்தின் கீழ் தடை செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

கோவில்பட்டி - ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.!

Image
  கோவில்பட்டி  அருகே நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்ற விண்ணப்பம் பதிவு ஏற்றம் செய்ய ரூ.5ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர்  பொன்ராஜா லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார் . தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொன்ராஜா என்பவர் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை மாற்றுவதற்காக கோவில்பட்டியை சேர்ந்த பாரதிசங்கர் என்பவர் நாலாட்டின்புதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு பொன்ராஜா, பாரதி சங்கரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து பாரதிசங்கர் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் ஆலோசனைபடி பாரதி சங்கர் இன்று காலை ரசாயனம் தடவிய 5 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இளநிலை பொறியாளர் பொன் ராஜாவிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஹெக...

தேசிய வாக்காளர் தின பேரணி: ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்!

Image
  தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடி மாநகராட்சி இராஜாஜி பூங்கவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பேரணியில் பங்கேற்றவர்கள் ''வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என வாக்காளர் உறுதி மொழி ஏற்றனர். விழாவில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரணி காய்கனி மார்க்கெட் பழைய பேருந்து நிலையம் வழியாக குரூஸ் பர்னாந்து சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் கல்லூரி, மாணவ மாணவிகள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர்.