Posts

ஆவின் துறை சார்ந்த காலாண்டு கூட்டம் கோவையில் நடைபெற்றது

Image
ஆவின் துறை சார்ந்த காலாண்டு கூட்டம் கோவை  ஆர். எஸ். புரம் அலுவலகத்தில் நடைபெற்றது ஆவின் மேலாளர் பாலபூபதி தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்ட துணைத் தலைவர் சமூக ஆர்வலர் லயன்.D. தேவபாலன் கலந்து கொண்டார் நுகர்வோர் சார்பில் 1) ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் 2) மற்ற பாலகங்களைப் போல் ஆவின் பாலகங்களில் பேப்பர் பொருட்களில் விற்பனை செய்ய வேண்டும் 3) ஆவின் பாலகங்களில் பொதுமக்கள் அறியும்படி விளம்பர தட்டிகள் வைக்க வேண்டும் 4) ஆவின் பாலகங்களில் நுகர்வோர்கள் அறியும்படி விலை பட்டியல்களை ஆவின் பாலகங்கள் முன்பு வைக்க வேண்டும் உள்ளிட்ட நுகர்வோர் கோரிக்கைகளை முன் வைத்தார் பல நுகர்வோர் அமைப்புகள் இதில் கலந்து கொண்டன

சத்தியமங்கலத்தில், அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.முன்னாள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்பங்கேற்பு.

Image
ஈரோடு மாவட்டம். சத்திய மங்கலத்தில் அதி முக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், அதி முக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட் டையன் எம்.எல்.ஏ. தலைமையில், பவானி சாகர் சட்ட மன்ற உறுப்பினர் அ. பண்ணாரி எம் .எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை யுரையாற்றிய ,கே. ஏ செங்கோட்டையன், பூத் கமிட்டியில், ஆற்றல் மிக்கவர்கள், கட்சிக்காக தியாகம் செய்தவர் கள், வாக்காளர்களை நன்கு அறிந்தவர்கள், இளைஞர்கள். மகளிர் அணியினர் இடம்பெற வேண்டும் என்றும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகு தி களிலும் அதிமுக தலைமையிலான,   கூட் டணி வெற்றி பெறும் என்றும்,  சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள், நாடாளுமன்ற தேர்தலி லும் அதிமுக கூட்டணியில், இடம் பெறுவார் கள் என்றார். மேலும் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் கட்சியில் இணையலாம் என்றும், அவர்களுக்கும் கட்சியில் பொறு ப்பு கள் வழங்கப்படும் என தெரிவித்தார். கூட்டத் தில்,சத்தியமங்கலம், வடக்கு ஒன்றிய செய லா ளர் மாரப்பன், தெற்கு ஒன்றிய செயலா ளர் என்.சிவராஜ். ப...

ராஷ்ட்ரிய இந்து மகா சபா அமைப்பின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Image
ராஷ்ட்ரிய இந்து மகா சபா  அமைப்பின் மாநிலத் தலைவர்  வேலுச்சாமி  கோவை மாவட்ட ஆட்சியரிடம் தனது நிர்வாகிகளுடன்  மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கோவையில்  இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுமாறு கூறிவரும் இஸ்லாமிய அமைப்புக்களை கண்டித்து எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டி எனது மனு  நான் மேற்படி இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவராக தேச மற்றும் தெய்வீக பணி செய்து வருகிறேன்.கடந்த சில மாதங்களாக செய்திகளிலும் சமூக வலைத்தளம் போன்ற ஊடகங்களிலும் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டி சில இஸ்லாமிய அமைப்புகள் சிறை முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. மேலும் தமிழக அரசு இந்த விவகாரத்தை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி ஆளுநர் திருப்பி அனுப்பியதாகவும் அறிய முடிகிறது.அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை பேரறிஞர்அண்ணா பிறந்தநாளை வருவதாகவும் அறிகிறோம்  அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை செய்யக் கோரி  வருகின்றனர் மேலும் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை பேரறிஞர் அண்ணா ...

சுற்றுலா சென்று வந்த போது பரிதாபம்... சாலை விபத்தில் 7 பெண்கள் பலி

Image
இன்பச் சுற்றுலா சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக பலியானார்கள். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த ஓணான் குட்டை பகுதியை சேர்ந்த  45க்கும் மேற்பட்டோர் கடந்த 8 ஆம் தேதி ஓணான் குட்டை பகுதியில் இருந்து தர்மஸ்தாலா கோவிலுக்கு இன்பச் சுற்றுலா சென்றனர். அவர்கள் அங்கிருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில் அவர்களில் சுமார் 19 பேர் வந்த மினி பஸ் அதிகாலை 3 மணி அளவில் பஞ்சர் ஆகியுள்ளது. அதன் காரணமாக மினி பஸ்ஸில் இருந்த பெண்கள் சண்டியூர் பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது பஞ்சர் ஆன மினிபஸ் தேசிய நெடுஞ்சாலையில் நின்று இருந்ததால் அதி வேகமாக வந்த பின்னே வந்த ஈச்சர் வேன் மினி பஸ் மீது மோதியது. இதில் சென்டர் மீடியத்தில் அமர்ந்திருந்த பெண்கள் மீது மினி பஸ் விழுந்தது. மினி பஸ் விழுந்ததில் நசுங்கி சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் உயிரிழந்தனர்.  சம்பவ இடத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உட்பட 10ககும் மேற்பட்ட போலீசார் சம்பவத்திற்கு ...

சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா நெல்லியாளம் நகராட்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள அம்மா உணவகம் இவ்உணவகம் பல்வேறு ஏழை எளிய மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் பயன் அடைந்து வருகின்ற இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது சாலையில் செல்வதால் இப்பகுதியில் நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் பந்தலூர் அரசு மருத்துவமனை இங்கு அமைந்துள்ளதால் தினமும் இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது சாலையில் வழிந்தோடி ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று கழிவு நீர் கால்வாய்யில் கலப்பதால் இப்பகுதியில் கடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது மேலும் துர்நாற்றம் வீசுகிறது கழிவுநீர் கால்வாயை சரிவர தூர் வாராதது கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது ஆகவே  மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுத்து உதவுமாறு இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் படுகர் சமுதாயத்தை சேர்ந்த முதல் பெண் விமானி ஜெயஸ்ரீ அவர்களுக்கு நீலகிரி மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

Image
நீலகிரி மாவட்டம் படுகர் சமுதாயத்தை  சேர்ந்த முதல் பெண் விமானி  ஜெயஸ்ரீ அவர்களை நீலகிரி மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் மாவட்ட செயலாளர்  S.குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பொன்னாடை அணிவித்தார் டாக்டர் B.சீனிவாசன் நீலகிரி மாவட்டம் முன்னாள் ராணுவ வீரர் நலசங்கம் தலைவர் ராமச்சந்திரன் முன்னாள் ராணுவ வீரர் நல சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கோட்டப்பாடியில் கடைகளை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி கோட்டப்பாடி என்ற இடத்தில்  அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள ஒரு கடையை  காட்டு யானை  தாக்கி அங்குள்ள பொருட்கள் எல்லாம் துவம்சம் செய்தது இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தினமும் மரண பீதியில் உள்ளனர்  அடிக்கடி யானை உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் தினமும் அச்சத்தில் உறைந்துள்ளனர் மேலும் நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இதுவரை யானை வராத பகுதியில் எல்லாம் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் தோட்டத் தொழிலாளர்கள்  பதட்டத்துடன் உள்ளனர் மேலும் கடத்த காலங்களில் பல்வேறு உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதலமைச்சர் மக்கள் வசிக்கும் இடங்களை சுற்றி  அகழி மற்றும் சோலார் மின்வெளி அமைத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழக அரசு செவிசாய்க்குமா  பொறுத்திருந்து பார்ப்போம்