Posts

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில்,

Image
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் ஈரோடு மாவட்ட காவல்துறை பங்களாபுதூர் காவல் நிலையம் சார்பில்,கெம்பநாயக்கன்பாளையத்தில், 28-10-2024 திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில், கெம்ப நாயக்கன்பாளையம் அம்மன் கோவில் திடலில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரபல தனியார் நிறுவனத்தில் குடோனை திறந்து லைட் சோடா ஆஸ் கடத்தல் .

Image
  தூத்துக்குடியில் பிரபல தனியார்  நிறுவனத்தில் குடோனை திறந்து லைட் சோடா ஆஸ் கடத்தல் . தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு வழக்கில் மாரியப்பன் என்ற லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும்  மூன்று பேர் கைது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.வழக்கில் சம்பந்தப்பட்ட முத்தையாபுரத்தைச் சேர்ந்த ஜெபக்குமார் செக்காரக்குடியைச் சேர்ந்த செல்வம் மற்றும் செக்காரக்குடியைச்  சேர்ந்த மணிகண்டன் என்ற மூன்று பேரையும் காவல்துறை கைது செய்து மேலும் வழக்கில் தொடர்புடைய   ஒன்பது பேர்களை போலீஸ் தேடி வருகிறது இதில் இரண்டு முறையாக 50 டன் அளவுக்கு பொருள் திருடப்பட்டதாக தனியார் நிறுவனம் தெரிவித்தது அதில் 21 டன்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டது.   மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒன்பது பேரை போலீஸ் தேடி வருகிறது

தீன் இலாஹி போன்றுள்ளது விஜய் கட்சி கொள்கை! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து

Image
*தீன் இலாஹி போன்றுள்ளது விஜய் கட்சி கொள்கை!* *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கருத்து!*   முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்ட கலப்பு மதம் தீன் இலாஹி ஆகும். இம்மதம் கி.பி.1582ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து அவர்களை ஒன்றிணைக்க எண்ணினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் தீன் இலாஹி என்ற மதத்தை தோற்றுவித்தார். முகலாய மன்னர் அக்பர் பல்வேறு மதங்களில் இருக்கின்ற நல்ல விஷயங்களை மட்டும் எடுத்து தீன் இலாஹி என்னும் ஒரு மதத்தை உருவாக்கினார். இது 15ம் நூற்றாண்றைய கதை. அதே பாணியில் இன்று அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்ற குறிப்பிட்ட நல்ல கொள்கைகளை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழக வெற்றி கழகம் தன்னுடைய கொள்கை பிரகடனத்தை விழுப்புரம் விசாலையில் நடைபெற்ற மாநாட்டில் அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். பெரியார் கொள்கையை ஏற்பதாகவும் அதில் கடவுள் மறுப்பை மட்டும் தவிர்ப்பதாகவும், திராவிடக் கட்சிகளின் மதச் சார்பின்மை, ஜாதி மத இன வேறுபாடுகளை கலைதல், தீண்டாமை ஒழிப்பு, சம...

மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 4 இட்லி 50 ரூபாய் என்று அதிக விலையில் விற்பனை! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை

Image
மயிலாடுதுறை, சீர்காழி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் 4 இட்லி 50 ரூபாய் என்று அதிக விலையில் விற்பனை! நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ. அப்பர்சுந்தரம் கோரிக்கை  மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு செல்வதற்காக இன்று காலை 7:30 மணியளவில் ரயிலில் ஏறினேன். அங்கு பிளாட்பார்மில் இட்லி, பொங்கல், வடை விற்பனை செய்த நபரிடம் இட்லி வாங்கினோம். அதன் விலை 50 என்றார். 4 இட்லிக்கு 50 ரூபாய் என்பது மிகவும் அதிகமாக இருந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. ரயில்வேதுறை உணவுகளுக்கான விற்பனை விலை மற்றும் அளவு நிர்ணயம் செய்த பொழுதும் இப்படிப்பட்ட அதிக விலையில் விற்பனை செய்கின்ற நபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக காலை,மதியம், இரவு வேலைகளிலும் அதிக அளவில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற ரயில் நிலையத்தில் இப்படிப்பட்ட அதிக விலையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வது என்பது ஏற்கமுடியாது. நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்பதை ரயில்வே துறை அதிகாரிகள் அவ்வப்பொழுது திடீர் ஆய்வு செய்து தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்கா...

நதிகளை வணங்கி பாதுகாப்போம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வலியுறுத்தல்

Image
நதிகளை வணங்கி பாதுகாப்போம் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வலியுறுத்தல்  வட இந்தியாவில் நதிகள் வழிபாடு அதிக அளவில் இருப்பதனால் வறட்சி என்னும் சொல்லுக்கே இடமில்லாமல் தொடர்ந்து தண்ணீர் பஞ்சமின்றி கிடைத்து பல்வேறு மாநிலங்கள் வளம் பெருகி விவசாயம் செழித்து இருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வகையில் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓடுகின்ற காவேரி நதியை போற்றிப் பாதுகாத்து வணங்க வேண்டும் என்னும் உயர்ந்த சிந்தனையில் *சுவாமி ராமானந்த மகராஜ்* தலைமையில் 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் காவிரி நதி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகு மலை தலை காவிரியில் இருந்து தொடங்கி காவிரி நதி வழிந்தோடும் அனைத்து நகரம் கிராமம் வழியாக சென்று மயிலாடுதுறை துலாக்கட்டம் மற்றும் பூம்புகாரில் காவிரி கலக்கும் இடத்தில் நிறைவு செய்கிறார்கள். யாத்திரையில் நதிக்கு ஆரத்தி வழிபாடு நடத்தி பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை நேரில் சந்தித்து நதிகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட வருகிறது. குறிப்பாக நதிகளில் பிளாஸ்டிக், குப்பை, கூளங்களை கொட்டக்கூடாது. பழைய கிழிந்த அசுத்தமான துணிகளையும், தேவ...

பெரியார் முதல் மூவேந்தர் வரை... மாநாட்டு கட் அவுட்டுகளில் என்ன சொல்ல வருகிறார் விஜய்!

Image
நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான ‘தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள். 85 ஏக்கரில் மாநாட்டு அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. 200 ஏக்கர் நிலம் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டு பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.  மாநாடு மேடையில் "வெற்றி கொள்கை திருவிழா" என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலை நோக்கமாக கொண்டு கட்சியின் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  விஜய் மாநாட்டில் என்னென்னவெல்லாம் இருக்கிறது என்று தமிழக ஊடகங்கள் அனைத்துமே தொடர்ச்சியாக பேசி வருகின்றன. இந்த மாநாட்டு திடலில் 101 அடி  உயர கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலும் உருவாகும் கட்சிகள் திராவிடம் என்ற சொல்லை பெயரிலும், கருப்பு நிறத்தை கொடியிலும் கொண்டிருக்கின்றன. ஆனால், விஜய் கட்சிக்கொடியில் கருப்பு நிறம் இல்லாமல் மஞ்சள், சிவப்பு நிறங்கள் இருக்கிறது.   தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் திடலில் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர், சு...

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சியில், ரூபாய் 5 இலட்சம் மதிப்பில், வடிகால் கட்ட பூமி பூஜை.,

Image
கொமாரபாளையம் ஊராட்சி, சிவியார்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில், வடிகால் வசதிகள் வேண்டி, பொது மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்,பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற, ஊராட்சி மன்ற தலைவர்,2024-25 ஆம் ஆண்டு, ஊராட்சி 15-வது நிதி குழு மான்யம் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், நிதி ஒதுக்கீடு செய்து, வடிகால் கட்ட பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் நிகழ்ச்சிக்கு, தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மேஷ்,வார்டு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி,விக்னேஸ்வரி சுப்பிர மணியம், நிலக்கிழார் ராம்கோட்டிசிவம், வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு,ஊர் கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி,அதிமுக கிளைச் செயலாளர்கள் சிவக்குமார்,நடராஜ் மற்றும் பொதுமக்கள திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.