Posts

நாளை மறுநாள் பிளஸ்2 தேர்வு முடிவுகள்... அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

Image
12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 8ஆம் தேதி காலை 9 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடுகிறோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்  தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 12 ம் வகுப்பிற்கு மார்ச் 3 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத் தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3,78,545 மாணவர்களும், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என 8,21,057 மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தப்பட்டன. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு அரசு தேர்வு துறை தயாராக உள்ளது.  இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட தகவலில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் எட்டாம் தேதி காலை 9 மணி அளவில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்படும் என அ...

திருநள்ளாறு சென்று வந்த போது குழியில் மொபட் விழுந்த விபத்தில் கணவன், மனைவி பலி... காயங்களுடன் விடிய விடிய தவித்த சிறுமி!

Image
 திருப்பூர்: இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய தம்பதியினர்    பாலத்திற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து   பலியானது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் சூரியநல்லூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ்(48) ஆனந்தி(39) அவர்களது மகள் தீக்ஷிதா(15) . இவர்கள்  மூவரும் குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் திருநள்ளாறு கோயிலுக்கு நேற்று முன் தினம் சாமிதரிசனம் செய்ய  சென்றனர். திருநள்ளாறு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு  நேற்று இரவு அவர்கள் இருசக்கர வாகனத்திலேயே வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். வாகனத்தை நடராஜ் இயக்கி வந்த நிலையில், அவரது மனைவி ஆனந்தி மற்றும் மகள் தீக்‌ஷிதா வாகனத்தில் அமர்ந்து வந்தனர்.  இவர்கள் தாராபுரம் அருகே குள்ளாய்ப்பாளையம் மாந்தோப்பு பாலத்தில் வந்து கொண்டிருந்த பொழுது பாலம் கட்டுவதற்காக அப்பகுதியில் குழி தோண்டி கான்கிரீட் போடும் பணிகள் நடந்து வந்த பகுதிக்கு வந்தனர். குழி தோண்டி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் தடுப்புகள் ...

வேங்கை வயல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை... திருப்பூரில் வன்னியரசு பேட்டி

Image
எந்தவிதமான போராட்டமும் செய்யாமல் வேங்கை வயலை பற்றி பேசுவதற்கு மத்திய நிதி அமைச்சிருக்கோ பாஜகவிற்கோ தகுதி இல்லை திருப்பூரில் நடைபெற்ற வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர். வன்னியரசு பேட்டி.. வக்பு திருத்தச் சட்ட மசோதாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராயல் ராஜா தலைமையில் சி. டி.சி.பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வன்னியரசு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு அம்பேத்கர் வடிவமைத்த 26 சட்டத்தை பாஜக அரசு திருத்தம் செய்து சட்டத்தை இயற்றி வருவதாகவும் இந்த வகுப்பு திருத்தச் சட்டத...

தோட்டத்து வீட்டில் கணவன்-மனைவி அடித்துக் கொலை... 30 பவுன் நகை கொள்ளை..

Image
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி, உச்சிமேடு அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் உள்ள மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (75). இவரது மனைவி பாக்கியம்மாள். விவசாயி. இவர்கள் இருவரும் மேகரையான் தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவரது மகன் முத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் தனியாக வசித்து வரும் கணவன், மனைவி இருவரும் கடந்த இரண்டு நாட்களாக மகன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது கணவன் ராமசாமி வீட்டிற்கு உள்ளேயும், மனைவி பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியேயும் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட எஸ்பி., சுஜாதா ,  பெருந்துறை டிஎஸ்பி., கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட  பாக்கியம் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் தங்கவள...

திரெளபதியின் தாகம் தீர்க்க பீமன் உருவாக்கிய பீம்தால் ஏரி!

Image
நாம் வாழும் இந்த 2025ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 3100 ஆண்டுகள் முதல் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் தான் பாண்டவர்கள் காலம். அதாவது மகாபாரதக் காலம். அப்போதைய காலகட்டத்தில் பாண்டவர்களின் வனவாச காலத்தில் பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் காடுகளில் பாண்டவர்கள் சுற்றித்திரிந்தார்கள்.  12 ஆண்டு வனவாச காலத்தில் இமயம் முதல் குமரிவரையில் பல இடங்களில் பஞ்சபாண்டவர் தொடர்பான வரலாற்று இடங்கள் இன்னும் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றாக இருப்பதுதான் பீம்தால் ஏரி. இந்த பீம்தால் ஏரியானது பாண்டவர்கள் வனவாசத்தின்போது, இமயமலையில் குமாவோனி பகுதியில் திரெளபதியுடன் சுற்றித்திரிந்தா ர்கள். அப்போது திரெளபதி தாகத்திற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதற்காக பீமன் தனது கதாயுதத்தால் மலையை உடைத்து இந்த ஏரியை உருவாக்கினாராம். ஏரியின் கரையில் சிவலிங்கத்தை வைத்து பூஜையும் செய்திருக்கிறார். இந்த இடமே இப்போது பீம்தால் ஏரியாகவும், பீமேஷ்வர் கோவிலாகவும் இருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிற இந்த பீம்தால் ஏரியானது, 5 ஆயிரம் அடி உயர மலைமேல் இருக்கிறது.  17 சதுர கி....

மலைமக்களின் குலதெய்வம் அல்மோரா நந்தாதேவி!

Image
இந்தியாவின் இரண்டாவது உயரமான மலைச்சிகரம் தான் நந்தா தேவி. உத்தரகண்ட் மாநிலத்தின் பெருமையாக, கம்பீரமான அடையாளமாக நிற்கிறது. 25 ஆயிரத்து 63 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை கர்வால் இமயமலையின் மேற்கு கிளையின் ஒரு பகுதியாகும். இந்த சிகரத்தின் சுற்றுப்பகுதியில் நந்தாகினி நதி உற்பத்தியாகி ஓடுகிறது.   இந்த நந்தாதேவி சிகரமானது துர்க்கையின் வடிவமாகும். இமயமலையின் பல்வேறு மலைக்கிராமங்களில் நந்தாதேவி கும்பிடப்படுகிறார். அப்படி வழிபடப்படும் ஒரு முக்கியமான இடம் தான், உத்தரகாண்டில் அல்மோராவில் உள்ள நந்தாதேவி கோவிலாகும்.  நந்தா தேவியைப்பற்றி ஸ்ரீ தேவி பகவத் புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் துர்கா சப்தசதி போன்ற பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன.   சைலபுத்ரி என்றும் அழைக்கப்படும் நந்தா தேவி இமயமலையின் மகளாக கருதப்படுகிறார். பார்வதி தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகும். இயற்கையின் தெய்வமான நந்தாதேவி மலை மக்களையும் நிலத்தையும் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. அவரை குலதெய்வமாக கும்பிடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நந்தா தேவி சந்த் மன்னர்கள் நந்தாதேவியை குல தெய்...

இமயமலையில் சூரியனுக்கு இருக்கும் ஒரே கோவில் தெரியுமா? நோய்கள் தீர்க்கும் காதர்மால் சூரியனார் கோவில்!

Image
வேதகாலத்துக்கு முன்னரே இந்த உலகத்தின் இயக்க சக்தியான சூரியனை நமது முன்னோர்கள் கும்பிட்டு வந்திருக்கிறார்கள். நமது வாழ்வியல், கலாச்சாரத்தோடு சூரிய வழிபாடு மிகவும் தொடர்புடையதாக இருந்து வந்து இருக்கிறது. அந்த அடிப்படையில், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சூரியன் கோவில்களும் கட்டப்பட்டு இருக்கின்றன. நமது பாரதத்தில் மொத்தம் ஆறு சூரியனார் கோவில்கள் இருக்கின்றன. தமிழகத்தில் நவகிரக கோவில்கள் வரிசையில் கும்பகோணத்தில் சூரியனார் கோவில் உள்ளது. அடுத்ததாக ஒடிசாவின் கோனார்க்கில் சூரியனார் கோவில் உள்ளது. காஷ்மீரின் அனந்தநாக்கில் பல நூற்றாண்டுகள் கடந்த சூரியனார் கோவில் உள்ளது; அது சிதிலமடைந்து இருக்கிறது. குஜராத்தின் மொதீராவில் ஒரு சூரியனார் கோவிலும், குஜராத்தில் உள்ள கும்ளியில் நவகிரக சூரியர் கோவிலும் உள்ளது. உத்தரகாண்டின் காதர்மாலில் ஒரு சூரியனார் கோவிலும் உள்ளது.  இது தவிர 1988ல் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் ஜி.டி.பிர்லாவால் ஒரு சூரியர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்தால் இந்தியாவில் சூரியனுக்கு 7 கோவில்கள் உள்ளன.  இவற்றில் நாம் காண இருக்கிற காதர்மால் சூரியன் கோவிலானது மிகவும...