தாலியை கையில் பிடித்து கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்!

உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து பெண்கள் தாலியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த செம்மிபாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து  பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படட்து.


கடந்த வாரம் உயர் மின் கோபுரம் அமைக்க அளவிடும் பணிகள் மேற்கொண்டதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற பேரணியாக சென்று கிராம் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும்  எந்த வித அறிவிப்புமின்றி அளவிடும் பணிகள் மேற்கொள்வதை கண்டித்தும் கோவை மாவட்டத்தை போல உயர்ந்த பட்ச இழப்பீடு வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மஞ்சள்  கட்டிய தாலியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்