சீர்காழி அருகே திட்டை கிராம சபை கூட்டம்!!

சீர்காழி அருகே திட்டை கிராம சபை கூட்டம் நடைபெற்றது.




நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை ஊராட்சியில் 71-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திட்டை ஊராட்சி மன்ற தலைவர்  பெரியசாமி தலைமையில் கூட்டம் நடந்தது. திட்டை கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையின் பகுதி நேர கடையை குளங்கரையில் புதிதாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சீர்காழி ஊராட்சி ஒன்றிய உதவியாளர்  சுதா, திட்டை ஊராட்சி எழுத்தர்  பொன்.அன்பரசன், திட்டை ஒன்றிய கவுன்சிலர்  விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயராணி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அங்காடி விற்பனையாளர்  முனுசாமி, கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். திட்டை கிராம நிர்வாக அலுவலருக்கு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்  வராமல் புறக்கணித்தார்.



Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்