Posts

Showing posts with the label செய்திகள்

திருப்பூர் கொரோனா சித்த மருத்துவமனையில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Image
திருப்பூர் மாநகர் காங்கேயம் சாலையில் சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவு கடந்த மாதம் 24ம் தேதி துவங்கப்பட்டது. சித்த மருத்துவ முறையில் கொரோனா சிகிச்சை பெற விரும்பும் நபர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 12 நாட்களில் 74 பேர் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டு 4 வயது சிறுவன் உட்பட 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோயாளிக்கு மூலிகை தேனீர், தொண்டை சுத்தம், அதிமதுர நசியம், நொச்சி தைலம், ஆவி பிடித்தல், கபசுர குடிநீர் என சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும், தெரிவித்தனர்.  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கே.ஆர்.என்.ஹோமியோபதி  மருத்துவர் கலீல் ரஹ்மான் வழங்கினார். 

பெங்களூர் இரவுநேர ரயில் முன்மொழிவு... தென்னக ரயில்வே துறைக்கு நன்றி - நடராஜன் எம்.பி

Image
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பெங்களூர் இரவு நேர ரயில் மற்றும் தென்மாவட்ட மக்கள் பயன்பெரும் ரயில் சேவைக்கான முன்மொழிவை பரிந்துரைத்த தென்னக ரயில்வே துறைக்கு எம்.பி நடராஜன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதர கோரிக்கைகைகளையும் உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் ரயில் சேவை முக்கிய பங்கினை வகித்து வருகிறது. இதன் காரணமாகவே அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கிற ரயில்நிலையமாகவும் கோவை இருந்து வருகிறது. தொழில், கல்வி, மருத்துவம் ஆகிய தேவைக்காக  இதர மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள பல்வேறு தரப்பட்ட மக்கள் கோவை மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இருப்பினும் போதிய ரயில் சேவை இல்லாதிருப்பது குறித்து பலமுறை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். மேலும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் என பலரும் ஒருங்கினைக்கப் பட்டு ரயில்வே போராட்டக்குழுவின் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்க பல கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். இதில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக...

திருப்பூரில் 6 வயது குழந்தை உள்பட 26 பேருக்கு கொரோனா... ஏரியா வாரியாக பாதிப்பு விவரம்

Image
திருப்பூரில் இன்று மட்டும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 262 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இப்போது வரை 112 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் விவரம் வருமாறு: திருப்பூர்  உடுமலை, கண்ணமநாயக்கனூரை சேர்ந்த 55 வயது ஆணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் நந்தவனம்பாளையத்தை சேர்ந்த 60 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகரில், லட்சுமி நகரில் 31 வயது ஆண், 81 வயது ஆணுக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. ஆண்டிபாளையம் வீனஸ் கார்டனில் 26 வயது ஆண், 40 வயது ஆண், லட்சுமி நகர் 50 அடி ரோட்டில் 85 வயது ஆண், காலேஜ் ரோடு எல்.ஐ.சி., காலனியில் 52 வயது ஆண், 15 வேலம்பாளையத்தில் 55 வயது ஆண், 29 வயது ஆண், 26 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மாரப்ப கவுண்டர் வீதியில் 31 வயது ஆணுக்கு தொற்று உறுதி, 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் 27 வயது பெண், 55 வயது பெண் ஆகியோருக்கு தொற்று ஏற்ப்பட்டு உள்ளது. அனுப்பர்பாளையத்தில் 46 வயது ஆண், காங்கயம் ரோடு, விஜயாபுரம், சுப்புலட்சும...

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடி

சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஒரு இடத்தில் இருப்பவர்கள் அந்த மாவட்ட எல்லைகளை கடந்து செல்லவும் முடியாது. மற்றவர்கள் அந்த மாவட்டத்துக்குள் நுழையவும் முடியாது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, பழைய மாமல்லபுரம் சாலையில் செம்மஞ்சேரி, ஜி.எஸ்.டி. சாலையில் பீர்க்கங்கரணை இரணி அம்மன் கோவில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, நெல்லூர் சாலையில் பாடியநல்லூர் எம்.ஏ.நகர், மணலி சாலைய...

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா ஆலோசனை கூட்டம்

Image
பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - தமிழக முதல்வர் 22ம் தேதி வருகை: ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம். திருச்செந்தூரில் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை விழா முன்னேற்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரி ல் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின்  மணி மண்டபம்  திறப்பு விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தரவுள்ளது தொடர்பாக விழா முன்னேற்பாடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் வீரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு 22.02.2020 அன்று நேரில் வருகை தந்து திறந்து வைக்க உள்ளார்கள். தொடர்ந்து அருகில் உள்ள ஐடிஐ வளா...

திருச்செந்தூர் கோயிலில் ரூ.250 கட்டண தரிசனத்தில் லட்டு, இலை விபூதி பிரசாதம்

Image
திருச்செந்தூர் கோயிலில் ரூ.250 கட்டணத்தில் தரிசனம் - பக்தர்களுக்கு லட்டு, இலை விபூதி பிரசாதம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு லட்டு, இலை விபூதி பிரசாதம் வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடான திருச்செந்தூர் கோயிலில் 250 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்கள் இலை விபூதி அடங்கிய பிரசாதம் வழங்க கோரிக்கை வைத்து வந்தனர். இதை நிறைவேற்றும் வகையில் கொடிமரத்தில் வைத்து ஒரு லட்டு, இலை விபூதி வழங்க அறநிலையத்துறை ஆணையர் அனுமதியளித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது

5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் போராட்டம்!!

Image
வாணியம்பாடியில் 5-வது நாளாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.     திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து 5 நாட்கள் தொடர் முழுக்க போராட்டம் அறிவித்து ஈடுபட்டு வந்த நிலையில் இன்று 5வது நாள் மற்றும் இறுதி நாளான இன்று இஸ்லாமிய பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.      

அறிவியல் சோதனைகள் செய்து கற்றல்!!

Image
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் எளிய அறிவியல் செயல் சோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது.                                         நிகழ்விற்கு வந்தவர்களை மாணவி நதியா   வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அ .மு.மு. அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் மகாதேவி   மற்றும் அரங்குலவன்  ஆகியோர் அறிவியல் உபகரணங்களை கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள்  மூலம் செய்து காண்பித்து விளக்கினார்கள்.நிகழ்வில் ஒளி நேர்கோட்டில் செல்லுதல்,பன்முக எதிரொலிப்பு,காந்தவியல் ,ஈர்ப்பு விசை,விலக்கு விசை ,காந்தத்தின் வரலாறு தொடர்பான சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து கற்று கொண்டனர்.  நிறைவாக மாணவர் ஜோயல்   நன்றி கூறினார்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!!

Image
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்  நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.  முகாமில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள்  ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன முகாமில் ஏராளமான  இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு   வேலைக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

வேலைவாய்ப்பு - நான்கு மீன்வள உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு!!

தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை மூலம் திண்டுக்கல் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தில் நான்கு மீன்வள உதவியாளர் பணியிடங்களை இப்பணி நியமனத்திற்கான வழிமுறைகளின் படி நேரடி பணி நியமனம் செய்திட கீழ்க்காணும் இன சுழற்சி படி (பொது முன்னுரிமை, ஆதிதிராவிடர், ஆதரவற்ற விதவை முன்னுரிமை,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் பிரிவு முன்னுரிமை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் முன்னுரிமை தலா1 இடம்) 4 பணியிடங்கள்1:5 என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணியிடத்திற்கு 0C -30, MBC/BC - 32,மற்றும் SC/ST- 35 வயதுக்குள் இருத்தல் அவசியம், ஊதிய விகிதம் ரூ 15900 -50400 [Level 2] ஆகும்.   இப்பதவிக்கு விண்ணப்பிப்போர் நீச்சல், வீச்சு வலை வீசுதல்,மீன்பிடி வலை பின்னுதல் மற்றும் தமிழில் எழுத படிக்க அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.மேலும் இத் தகுதிகளுடன் மீன்வளத் துறையில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியலுடன் நாளிதழ் விளம்பரம் மூலம் பெறப்பட்ட தகுதியான நபர்களை சேர்த்து,மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையிலான தேர்வு குழுவால் நேர்முகத்தேர்வு பின்...

கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்!!

Image
கோபி பஸ் நிலையத்தில் 5ம், 8ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை  ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் 5-ம், 8-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது, இதில் மாநில பொது செயலாளர் கோவை ரவிக்குமார், மாநில துணை பொது செயலாளர் செல்வவில்லான், விடுதலை செல்வன் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி மற்றும் 200க்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோபி காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் தனியார் மண்டபத்தில் அழைத்து சென்றனர்.

கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம்!!

Image
குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் கோயிலில் விவசாயம் செழிக்க சிறப்பு யாகம் நடைபெற்றது.    கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகத்தம்மன் கோயிலில் விவசாயம் தழைத்தோங்க சிறப்பு யாகம் நடைபெற்றது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் சுயம்பு ஆதிநாகத்தம்மன்சக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் சிறப்பு யாகம் நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் விவசாயம் தழைத்தோங்கவும் சிறப்பு யாகம் இரவு நடைபெற்றது. யாகக்குண்டத்தில் அனைத்து விதமான மரப்பட்டைகள் மற்றும் குச்சிகள், பல்வேறு வகையான மூலிகைப் பொருட்கள், திரவியப்பொடிகள், மரத்தால் செய்யப்பட்ட கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, உரல் மற்றும் உலக்கை, கட்டில், அரிவாள், முறம், மூங்கில் கூடை, மூங்கில்தட்டு, விசிறி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் இடப்பட்டன. முன்னதாக குதிரை, பசு, காளை, ஆடு, பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கும் அனைத்து தாவரங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் விழாவில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டும் மகிழ்ந்தனர். விழாவில் ஜெய்குருதேவ் தெய்வேந்த அடிக...

கால்நடை மருந்தகத்தினை பயனாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டது!!. 

Image
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், வேலம்பாளையம் பகுதியில்  மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சார் கே.சி.கருப்பணன்  மற்றும் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் .உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  ஆகியோர்  தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தினை திறந்து வைத்து, 50 பயனாளிகளுக்கு ரூ.20.11 இலட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கினார்கள்.   கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மாட்டினங்களை பாதுகாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  வரும் பிப்ரவரி 9-ம் தேதி ரூ.1,000. கோடி மதிப்பீட்டில் 1700 ஏக்கர்  பரப்பளவில் தெற்காசியாவிலேயே மிக பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டவுள்ளார்கள்.  மேலும் கால்நடை பராமாpப்புத்துறையின் சாh;பில், கால்நடை அவசர மருத்துவ ஊh;தியான ‘அம்மா ஆம்புலன்ஸ்” சேவையினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள்ள வழங்கப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை முறைகள் அலைபேசியின் வாயிலாக தொpவிக்கப்படுகிறது.  இச்சேவையினை பெற 1962 என்ற கட்டணமில்...

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் இருந்தவர் இளைஞர்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்!!

Image
ஆதரவின்றி மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் இருந்தவர் இளைஞர்கள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.     கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் ஆதரவின்றி ஆடைகள் இல்லாமல்  மனநலம் பாதிக்கப்பட்டு 50 வயது தக்க ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக  உணவு இல்லாமல் இருப்பிடம் இல்லாமல்   நெடுஞ்சாலை பகுதியில் அலைந்து  கொண்டிருந்தார். அவ்வழியே தினந்தோறும் நிறைய மனிதர்கள் கடந்து செல்லும் நிலையில் பாசார் மக்கள் பாதை  இளைஞர்கள் மற்றும் வேப்பூர் மனிதநேய குடும்பம் வாட்சப் குழுவினர் கண்டு அவரை குளிக்க வைத்து ஆடைகள் அணிய வைத்து பெரம்பலூர் வேலா கருணை இல்லம் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு மையத்தில் சேர்த்தனர். இவர்களின் சேவை பணியை கண்டு சமூக ஆர்வர்கள் இளைஞர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.உடன்வேலா காப்பகம்  நிறுவனர் அருண்குமார் ,பாசார் செல்வேந்திரன், துளிர் விஜய், பில்லூர் வினோத், சிற்றரசு, குமரேசன்,மற்றும் இளைஞர்கள் இருந்தனர்.      

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

Image
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தில் மனுநீதி நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். இதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா மற்றும் வேளாண்மை துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை 117 பயனாளிகளுக்கு 19 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.     இந்நிகழ்ச்சியில் திட்டக்குடி சமூக பாதுகாப்பு வட்டாடட்சியர் ரவிச்சந்திரன்,வேளான்துறை உதவி இயக்குநர்கள்,தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்  ஊராட்சி மன்ற தலைவர்கள்  மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.      

அயோத்திக்கு  புனித செங்கல் யாத்திரை  இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தீர்மானம்!!

Image
அயோத்திக்கு  புனித செங்கல் யாத்திரை  இந்து மக்கள் நல இயக்கம் சார்பில்   தீர்மானம்      திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் தமிழ்நாடு மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முத்தணம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மணடபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரகதீஸ்வரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்து மக்கள் நல இயக்க நிறுவனத்தலைவர் இளையராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பாலசுப்பிரமணியம், எல்.சதிஷ்குமார், செந்தில்வேல், மனோஜ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருக்கோவி லில் திருமணங்கள் பாதுகாத்தல், கோவில் ஆக்கிரமைப்புகள் அகற்றுதல், தாய் மதம் திரும்புதல் மதமாற்றம் தடுத்தல், சில இந்து கோவில்களில் வசதிகள் பற்றாக்குறையாக இருப்பதை கலெக்டரின்  கவனத்திற்கு சென்று நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதென்றும்,   ராமர் தினத்தன்று ராமேஸ்வரத்தில் இருந்து 60 பேர் 60 புனித செங்கல் எடுத்து அயோத்திக்கு பயணிக்கவுள்ளதாகவும், மாவட்ட வாரியாக இந்து இளைஞர்கள் கவுரவ விளையாட்டு போட்டிகள் நடத்துதல், பெண்களின்...

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல்!!

Image
மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல். மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்காது என்று அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் சீனிவாசாசுப்பராயா அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களுக்கு மடிகணிணி வழங்கும் விழா  நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி தலைமை வகித்தார் மயிலாடுதுறை உதவி ஆட்சியர் மகாராணி, சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். கல்லூரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். துணி நூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.ஏஸ்.மணியன் கலந்து கொண்டு 555 மாணவர்களுக்கு மடிக்கணிணி மற்றும் 20 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கி துவக்கி வைத்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் தஞ்சை கோயிலில் தமிழில் அர்ச்சனை என்பது வரவேற்கக் கூடியதுதான் அதனால் தமிழில் அர்ச்சனை செய்யக்கூடிய அளவுக்கு இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நாம் நடைமுறைப்படுத்த இருக்கிறோம் இதனை அரசியலாக்கத் தேவையில்லை. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் ...

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பொங்கல் திருவிழா!!

Image
கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள மிகவும் சக்திவாய்ந்த பொட்டு சாமிக்கு பொங்கல் திருவிழா தை மாதம் 19 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பொட்டு சாமிக்கு அன்று மதியம் ஒரு மணி அளவில் காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் வைத்து திருவிழா கொண்டாடுகிறார்கள். இக்கோயில் திருவிழா வருடம் ஒரு முறைமிகச் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அது சமயம் ஊர் பொது மக்கள் அனைவரும் பொங்கல்  வைத்தும், மாவிளக்கு எடுத்தும்,  சாமி அருள் பெற்றுவருகின்றனர் என்று  கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம்!!

Image
ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவிலில் 30- 1- 2020 தை மாதம் 16ஆம் நாள் காலை 9.30 மணிக்கு சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில் சக்கர மாற்றப்பட்டு நிலை வைத்து பக்தர்கள் வெள்ளத்தில் சிறப்பான முறையில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது நிகழ்வில் சிவகிரி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு!!

Image
 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டுவருகிறது இதில் கம்மாபுரம் பெண்ணாடம் ஆலடி வேப்பூர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையக் கூடிய நெல், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம்  கொள்ளு, பச்சைப்பயறு, உளுந்து போன்ற பயிர்களை விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு தினசரி கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதில் தாமதம் ஏற்பட்டு இரண்டு நாட்களாக விவசாயிகள் காத்திருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.    அப்போது விவசாயிகள் தங்கள் கொண்டு வரும் விளைபொருட்களை வாங்குவதில் அதிகாரிகள் காலம் தாழ்த்துவது ஆக குற்றம் சாட்டினார் இது குறித்து விசாரணை மேற்கொண்ட சார் ஆட்சியர் விவசாயிகளின் விளைபொருட்களை உடனடியாக வாங்க வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனைக்கூட  கண்காணிப்பாளரிடம் உத...