ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு

கொரானாவை ஒழிக்க பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மக்களிடம் உருக்கமான வேண்டுகோள்.


தனித்திருத்தல் மட்டுமே கொரோனாவை  ஒழிப்பதற்கு ஒரே தீர்வு என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் தனித்திருக்க வேண்டும்.  வளர்ந்த நாடுகளே இதனை  கண்டு அஞ்சுகின்றன.  மிக மிக முக்கியமான முடிவை இன்று எடுக்க உள்ளோம். இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் தொடர்த்து 21 நாட்கள்  ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.


 மக்களுக்கு  இரு கரங்கள் கூப்பிபிரதமர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு
முழுவதும் இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.  நாட்டின் வளர்ச்சியை விட தனி மனிதனுடைய உயிர் மேலானது என பிரதமர் மோடி உருக்கம்.
 கட்டுப்பாடுகள் இல்லை எனில் உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்கு சமம்.


 அலட்சியமாக இருந்தால் நோய்த்தொற்று பரவிவிடும்.
ஒரு நபருக்கு பரவிவிட்டால் அதன் எண்ணிக்கை 10 நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு  பரவிவிடும் அடுத்த நான்கு நாட்களில் பல மடங்கு அதன் எண்ணிக்கை கூடும்.  ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட 67 நாட்கள் ஆகும் அடுத்து நான்கு நாட்களில் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். பலருடைய பொறுப்பற்ற தன்மையால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டு செய்யும். 
எக் காரணத்தைக் கொண்டும் மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம். தனிமைப்படுத்துதலுக்கு எந்த நாடு முக்கியத்துவம் அளித்ததோ அந்த நாடே இந்த தொற்றில் இருந்து விடுபடும். ஒரு நபர் பாதிக்கப்பட்டால் இந்த தொற்று கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். 


ஊரடங்கு கடைபிடிக்காவிட்டால் ஒவ்வொரு குடும்பமும் அழிந்துவிடும் என பிரதமர் எச்சரிக்கை.


 இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்காவிட்டால் தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு நாடு பாதிப்புகளுக்கு உள்ளாகும். இந்நோயை தடுக்க அடுத்த 21 நாட்கள் மிக முக்கியமான நாட்கள்.
நோயை கட்டுப்படுத்த பிரதமர் 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்தியாவில் மட்டுமே கொரோனாவை  வீழ்த்த முடியும் என நம்புகிறேன்.


கிராமத்திலும் ஊரடங்கு உத்தரவு பின்பற்ற வேண்டும் அடுத்த 21 நாட்கள் நமக்கு மிக முக்கியமான நாட்கள் இது நோய்த்தொற்றை தடுக்க உதவும் ஒரு நபர் பாதிக்கப்பட்டு விட்டால் அது காட்டுத்தீ போல பரவும். சிலரின் பொறுப்பற்ற தன்மையால் நாடே மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்