Posts

Showing posts with the label இந்தியா

கர்நாடக புகைப்படக்காரர் கேமராவில் சிக்கிய கபினிக் காட்டுக் கருஞ்சிறுத்தை

Image
காடுகளில் வசிக்கும் கானக உயிரினங்களை காண்பது அரிதான விஷயம். காட்டுப்புலி, சிறுத்தை போன்ற அரிதான உயிரினங்களை காண்பதற்காக வன ஆர்வலர்களும், வனவியல் புகைப்படக்காரர்களும் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என கணக்கில்லாமல் காத்திருப்பது இன்றளவும் நடந்து வரும் விஷயம்.  அப்படி காத்திருந்தாலும், காட்டுப்புலி, சிறுத்தை என காண்பதையும் விட அரிதான விஷயம் கருஞ்சிறுத்தை ஒன்றை நேருக்கு நேர் காண்பது... இப்படி ஒரு அரிதான கருஞ்சிறுத்தையை, கர்நாடக மாநிலத்தின் கபினி வனப்பகுதியில்,  நேருக்கு நேர் நின்று படமெடுத்திருக்கிறார் கர்நாடக வனவியல் புகைப்படக்காரரான பிரசன்ன கவுடா.. பச்சைக்காட்டின் பின்னணியில், கருந்தோல் மின்ன, பார்வையை நெருப்பாக்கி, பாய்வதற்காக பதுங்கி நடந்து வருகிறது இந்த கருஞ்சிறுத்தை.. கருஞ்சிறுத்தையின் தீர்க்கமான பார்வையை  நீங்களும் பாருங்களேன்..  

ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

Image
காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் கானக புகைப்படக் கலைஞர்கள் அந்த வாய்ப்பை வரமாக பெற்றவர்கள். நாள் கணக்கில் வாரக்கணக்கில் காத்திருந்து கானக உயிரினங்களை படமெடுத்து அவற்றின் நடவடிக்கைகளை உலகத்துக்கு சொல்வார்கள். அந்த வகையில் செப்டம்பர் 30-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் கபினி வனப்பகுதியில், உற்சாகமாக நடை போட்ட புலி ஒன்று, கானுயிர் புகைப்படக்காரர் பிரசன்ன கவுடாவின் கேமரா கண்களில் சிக்கியது. அடர் வனத்தில் ஒய்யார நடை நடக்கும் புலியின் கம்பீரத்தை நீங்களும் கண்டு மகிழுங்கள்.. #TamilAnjal #Prasannagowda #Muruganandhan    

விவசாயிகளுக்கு பயன் தராத வேளாண் சட்டங்களை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: நாராயணசாமி பேட்டி

Image
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-  மத்திய அரசு வேளாண் பாதுகாப்பதாக கூறி 2 சட்ட மசோதாக்களை கொண்டு வந்து உள்ளது. இந்த சட்டங்கள்  விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் இல்லை. இந்த சட்டங்கள் இடைத்தரகர்களுக்கும்  பெரிய முதலாளிகள், பெரிய வியாபாரிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது. இடைத்தரகர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக சட்டத்தை கொண்டு வந்தால் சட்டத்தை மாற்றுவதாக பிரதமர் மோடி கூறுவது உண்மையல்ல. சட்டத்தை பார்க்கும் போது எல்லாமே வியாபார மையமாக உள்ளது. விவசாயிகளை பாதுகாப்பாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விலையை விவசாயிகள் தான் நிர்ணயிக்க வேண்டும். இடைத்தரகர்களோ வியாபாரிகளோ நிர்ணயிக்க முடியாது. இதை மாற்றி அமைக்க தான் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பெரிய அளவில் மார்க்கெட்டிங், பெரிய முதலாளிகளுக்கு பாதுகாப்பாக  சட்டம் உள்ளதால் தான் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த சட்டத்தை எதிர்த்து பாரதீய ஜனதா கூட்டணியில் உள்ள அகாலிதளம் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்து இருப்...

நகரி தொகுதியில் வளர்ச்சிப்பணிகள்: எம்.எல்.ஏ., ரோஜா துவக்கி வைத்தார்

Image
ஆந்திர மாநிலம், நகரி தொகுதிக்குட்ப்பட்ட, விஜயபுரம் மண்டலம், காளிகாபுரத்தில், ரூ. 21 லட்சம் மதிப்பில் ரெய்டு பரோசா கேந்திரா கட்டிடம் கட்டும் பணிகளை நகரி தொகுதி எம்.எல்.ஏ., ரோஜா பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

திருப்பூர் சுதந்திரதின விழா: ரூ.3.67 கோடி நல உதவி...கொரோனா பணிகளுக்கு பாராட்டு... கலெக்டர் விஜயகார்த்திகேயன் பங்கேற்பு

Image
திருப்பூர் மாவட்டம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற 74 சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 15 பயனாளிகளுக்கு ரூ. 3.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரியில் 74 சுதந்திரதினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்றுக்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், பலூன்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து, கொரோனா வைரஸ் (கோவிட்-19) தடுப்பு பணியில் ஈடுபட்ட 272 அரசு அலுவலர்கள், 07 தன்னார்வலர்கள், 70 காவல்துறையினர் என 349 முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இன்றைய விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,1...

தாறுமாறா தயாரிக்கிறாங்க...உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை அறிவித்தது ரஷ்யா...தமிழ்நாட்டில் இலவசமா கிடைக்குமா?

Image
உலகம் முழுக்க ஏழரை லட்சம் பேரை கொன்று குவித்து விட்டது சீனாவில் உருவான கொரோனா வைரஸ்.   கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன. இபடியாக உலகம் முழுக 150க்கும் மேற்ப்பட்ட தடுப்பூசிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளில் உள்ளன.    இந்தியாவில் கோவாக்சின்,  பிரிட்டன் மற்றும் சீனாவின் தடுப்பூசிகள் மனிதர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.    இந்த நிலையில்,  கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது. இரண்டு மாதத்தில் அது தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு செய்து உள்ளது.   இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறும் போது:   உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நில...

அயோத்தி ராமர் கோவில் தேசத்துக்கான அடையாளமாக இருக்கும்: வெள்ளிக்கல்லில் அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு

Image
இந்தியப்பிரதமர் மோடி இன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.    இன்று நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, கொரோனா தொற்று அச்சுறுத்தல்  காரணமாக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.   முதல் கட்டமாக, பிரதமர் மோடி அயோத்தி அனுமன்  கோவிலில் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் அங்குள்ள வளாகத்தில் பாரிஜாத மலர்க்கன்றை நட்டு வைத்தார்.   தொடர்ந்து, அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான  கல்லை வைத்து அடிக்கல் நாட்டினார்.   இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-...

அழகு கலைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் மாதாந்திர நிவாரணம்: 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமருக்கு இ-மெயில் மனு

Image
கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு தரப்பிலான தொழில்களையும், வாழ்வாதாரத்தையும்  ஒட்டுமொத்தமாய் காலி செய்து விட்ட நிலையில், அழகு கலைஞர்கள், சிகையலங்கார கலைஞர்களின் வாழ்வாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளது. எந்த வித வருமானமும் இல்லாமல் தவிக்கும் அழகு கலைஞர்கள், வாடகை, லோன்கள், மின்கட்டணம், மாதாந்திர செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர்.  அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில், நாடு முழுவதும்  அழகுத்துறை சார் நிபுணர்களின் பிரச்சினைகளை இந்திய அரசு நிர்வாகத்துக்கு எடுத்து சென்று தீர்வு பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் ஊரடங்கு தொடர்வதாலும், அழகுக்கலை நிலையங்களை மேலும்   திறக்க இயலாமல் போனதால், நாடு முழுவதும் அழகுக் கலை நிபுணர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் சார்பில் பாரதப்பிரதமருக்கு, இ-மெயில் மூலம் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  நாடு முழுவதும் கில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகுத்துறை சங்கத்தின் தலைவர் சங்கீதா சவுகான் தலைமையில் இந்த மனு அனுப்பும் நிகழ்வுகள் நடைபெற்றது. ஆயிரக்கணக்க...

திண்டுக்கல்லில் இனி ’பெண்ணாட்சி’... அத்தணை பதவிகளிலும் ஆளுமை காட்டும் பெண் உயரதிகாரிகள்

Image
பூட்டுக்கும், கோட்டைக்கும் பேமசாக இருந்து வரும் திண்டுக்கல், இனி பெண்களின் ஆளுமைக்கும் உதாரணமாக மாறி மேலும் பெயர் பெற தயாராகி உள்ளது.   ஆமாங்க, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத்துறையின் அனைத்து முக்கியப் பதவிகளிலும் பெண்களே நியமிக்கட்டு இருப்பதால், இந்தியாவிலேயே பெண்களால் ஆளப்படும் முதல் மாவட்டமாக விளங்குகிறது திண்டுக்கல்.   திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.பி.,யாக ரவளிபிரியா நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் பெண்கள் கோலோச்சுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் மு.விஜயலட்சுமி உள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா இருக்கிறார். மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கவிதா ஆகியோர் பணியில் உள்ளனர்.   திண்டுக்கல் ஆர்.டி.ஓ., வாக உஷா உள்ளிட்ட பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.   தற்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக முதல்முறையாக பெண் போலீஸ் உயரதிகாரியான ரவளிபிரியா நியமிக்கப்பட்டு உள்ளார்.    சென்னை மாதவரம் துணை ஆணையரா...

இனியும் ஆட்டம் போடுவீங்க... டிக் டாக் உள்பட 59 சீன ஆப்களுக்கு தடை

Image
இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த வாரததில் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி 20 இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்தனர். இதனால் இருபக்கமும் போர்ப் பதற்றம் ஏற்ப்பட்டது. இந்நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் 59 சீன செல்போன் அப்ளிகேஷன்களை தடை செய்து உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த தடை செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ஊரே திரண்டு ஆட்டம் போடும் ' டிக் டாக் ' உள்ளிட்ட ஆப்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. தடை செய்யப்பட்ட ஆபகள் லிஸ்ட் இதோ:

ஒடிஷா கடற்கரை பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சூறாவளி எச்சரிக்கைப் பிரிவு இன்று கூறியுள்ளதாவது: வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இன்று (2020, 16 மே அன்று) காலை ஐந்தரை மணிக்கு அட்சரேகை 10.4°வடக்கு மற்றும் தீர்க்கரேகை 87.0°டிகிரி கிழக்கில், பாராதீப்பிற்குத் (ஒடிசா) தெற்கே சுமார் 1100 கிலோ மீட்டர் தொலைவிலும்;  திகாவுக்கு (மேற்குவங்கம்) தெற்கே 1250 கிலோமீட்டர் தொலைவிலும்; கெப்புபராவிற்கு (பங்களாதேஷ்) தெற்கு-தென்மேற்கு திசையில் 1330 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது விரைவாக மேலும் வலுவடைந்து இன்று மாலையோ சூறாவளிப் அல்லது அடுத்த 24 மணி நேரத்திலோ கடும் சூறாவளிப் புயலாக உருவெடுக்கக் கூடும். 2020, மே17 வரையிலும் முதலில், வடக்கு வடமேற...

தினமும் 2 லட்சம் பேரை சொந்த ஊருக்கு அனுப்பும் ரயில்வே

Image
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் பிற நபர்களின் நடமாட்டம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை இயக்க முடிவு செய்திருந்தது. 2020 மே 15 நள்ளிரவு நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1074 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் நாட்களில் இது ஒரு நாளைக்கு 3 லட்சம் பயணிகள் வரை அளவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1074 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஆந்திரா, டெல்லி, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, கோவா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ளன. இந்த ஷ்ராமிக்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை... நடைபாதை வியாபாரிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன்... சிறு விவசாயிகளுக்கான அறிவிப்புகள்: நிர்மலா சீத்தாராமன் வெளியிட்டார்

Image
கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். அதில் என்னென்ன திட்டங்கள் அடங்கும் என்பது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து வருகிறார். இன்று அவர் பேசியது: இன்று இடம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், சிறு விவசயிகள் பற்றி பேச இருக்கிறோம். இன்று 9 புதிய திட்டங்கள் பற்றி பேச இருக்கிறோம். 3 கோடி விவசாயிகள்  நேரடி கடனாக 4 லட்சம் கோடி கடன்கள் பெற்று பயனடைந்திருக்கிறார்கள். 25 லட்சம் விவசாயிகள் (kisan Credit card) கடன் அட்டைகள்  வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.  விவசாயிகள், மற்றும் ஊரகப்பயனர்களுக்கு கடந்த சில மாதங்களில் உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  ஊரடங்கு காலத்தில் ரூ.63 லட்சம்  விவசாயிகளுக்கு  கடன் வழங்கப்பட்டு உள்ளது.  மாநில அரசுகள் வசம் 8700 கோடி விவசாயி கொள்முதலுக்காக வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் மத்திய அரசு வீடில்லாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கி உள்ளது.  இக்காலகட்டத்தில் 12 ஆயிர...

நான்காவது ஊரடங்கு நிச்சயம்...பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடியில் நிவாரண தொகுப்பு... பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரை

Image
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதற்காக தற்காப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 3 வது முறை நீட்ட்டிக்கப்பட்டு முடியும் நிலையில் உள்ளது. இதையொட்டி இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சிகள் மூலம் உரையாற்றினார். இந்த உரை நாடு முழுவதும், ஊரடங்கு குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. பிரதமர் மோடி பேசியது:  ஒரே ஒரு வைரஸ் நமது வாழ்க்கையை பெருமளவு பாதித்து உள்ளது.  ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. உலகம் முழுவதும் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம்.போராட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. மனித நேயம் தோற்பதில்லை. நாம் நம்மை நாமே காத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.  உலகத்திற்கு தன்னம்பிக்கையை நாம் அளித்துள்ளோம். உலகமே ஒரு குடும்பம் என்பதை நமது கலாச்சாரம் உணர்த்தி உள்ளது. தின...

கொரோனா ஊரடங்கில் பணம் பறிக்கும் ஆன்லைன் சீட்டாட்டம்: பெண்களும், குழந்தைகளும் போனில் விளையாடுவதால் பேராபத்து

Image
ஒரு மனுசன் வாழ்க்கைல நாசமா போகனும்னா சீட்டாட்டம், குடி, லாட்டரி, போதை போன்ற பல கெட்ட் பழக்கங்களில் ஒன்று இருந்தால் போதும்; வாழ்க்கையை மட்டும் இல்ல கையில இருக்கிற கடைசி காசையும் இழந்து விட்டு நடுத்தெருவுக்கு வந்து விடலாம். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லோரும் வீட்டில் முடிந்தளவு இருக்கிறார்கள். மதுக்கூடங்களுக்கும் பூட்டு போட்டாச்சு, லாட்டரி நம்ம தமிழ்நாட்டிலேயே கிடையாது. போதை வஸ்துகளை தேடிப்போறது மிகக் கடினமான விஷயம். இப்படி இருக்கையில், தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் வீடுகளில் இருக்கும் இளைஞர்களை குறி வைத்து நடத்தப்படும் ஆன்லைன் சீட்டாட்டத்தில் கோடிகளில் பணம் புரளுதாம். மேலும், நேரில் சீட்டாடினாலே எல்லாத்தையும் உருவிட்டு விட்டுருவாங்க.ஆன்லைனில் சொல்ல வேண்டியதே இல்லை, அக்கவுண்ட்டில் இருக்கிற கடைசி காசு வரைக்கும் உருவிவிட்டு ஆண்டியாய் அலைய விட்டு விடுகிறார்கள் இந்திய உச்சநீதிமன்றமே ஆன்லைன் ரம்மி போன்ற சீட்டாட்டங்கள் அறிவு சார்ந்த விளையாட்டு தான், அது சூதாட்டமல்ல என்Ru சொல்லி விட்டதாக, ஆன்லைன் சீட்டாட்ட நிறுவனங்கள் பதிவிட்டு ஆசை வார்த்தை கூறி அப்பாவி இ...

போலீசாருக்கு கொரோனா வராமல் பாதுகாக்க ஆலோசனை

பணியில் இருக்கும் காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வராமல் தங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகளை அவர்கள் பணியாற்றும் இடத்திற்கே மருத்துவர்கள் சென்று ஆலோசனை வழங்கினர். புதுச்சேரியில் இதுவரை நான்கு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது..  இந்நிலையில் மக்கள் வெளியே வராமல் தடுக்க  ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் இடுப்பட்டுள்ளனர். அவர்கள் புதுச்சேரியில்  உள்ள சிக்னல்கள், முக்கிய சந்திப்புகள் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து அத்தியாவசியம் இன்றி  வரும் மக்களுக்கு அறிவுரைகள் கூறியும் சிலர் மீது வழக்குகளும் பதிவு  செய்து வருகின்றனர்.  இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் தங்களை  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்று அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மருத்துவர்கள்   ஆலோசனை வழங்கினர். அதில் வெயிலில் நிற்கும் காவலர்கள் அதிக தண்ணீர் அருந்த வ...

கரோனாவுக்கு ஆந்திராவில் முதல் பலி

  டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சொந்த ஊரான விஜயவாடா திரும்பிய நிலையில், கடந்த 30 ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருடைய 55 வயது தந்தை விஜயவாடா அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். மரணம் அடைந்த நபரின் மகன் டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த மாதம் 17ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் தந்தை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது அவருக்கு அதிகப்படியான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவை உள்ளிட்ட உபாதைகள் இருந்தன. இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி மருத்துவமனையில் மரணம் அடைந்த அந்த நபர் என்ன காரணத்தால் மரணமடைந்தார் என்ற சந்தேகம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இருந்தது. எனவே அவருடைய உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்து காத்திருந்தனர். பூனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பட்ட முடிவில் மரணமடைந்த நபருக்கு கரோனா தொடர் இருந்தது உறுதி செய்யப்பட்டது. டெல்லியிலிருந்து திரும்பிய அந்த வாலிபருக்கு கரொனா தொற்...

3 மாதம் இ.எம்.ஐ., கட்ட வேண்டாம்: ரிசர்வ் வங்கியே சொல்லிருச்சு.

Image
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் உலகமே முடங்கி இருக்கிறது. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க்ப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கி உள்ளனர். கூலி தொழிலாளர்கள் வயிற்றை நிரப்பவே சிரமப்பட்டு வருகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் வயிற்ற்றுக்கு உணவு சேர்த்தாலும், வழக்கமான மாதாந்திர கடன் தவணைகளை நினைத்து கலங்கி வந்தனர்.  இந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடபபாடி பழனிசாமி மறு உத்தரவு வரும் வரை கடன்களை கேட்கக் கூடாது என அறிவித்திருந்தார். மேலும் தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இ.எம்.ஐ., தவணைகளை கட்ட வேண்டாம்; அவற்றுக்கு 3 மாதம் கால அவகாசம் அளித்திருப்பதாக கூறி உள்ளார்.  இதில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனி நபர் கடன் உள்பட மொத்தமாக எல்லாக்கடன்களுக்கும் தவணை கட்டுவதற்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த தவணை கட்டாமல் இருப்பதற்கு அபராதம் விதிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இத்துடன் ‘’ரெப்போ வட்டி  விகிதம் 4.4 ஆக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவ...

ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு

Image
கொரானாவை ஒழிக்க பிரதமர் மோடி இரண்டாவது முறையாக மக்களிடம் உருக்கமான வேண்டுகோள். தனித்திருத்தல் மட்டுமே கொரோனாவை  ஒழிப்பதற்கு ஒரே தீர்வு என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒவ்வொரு குடும்பமும் தனித்திருக்க வேண்டும்.  வளர்ந்த நாடுகளே இதனை  கண்டு அஞ்சுகின்றன.  மிக மிக முக்கியமான முடிவை இன்று எடுக்க உள்ளோம். இன்று இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் தொடர்த்து 21 நாட்கள்  ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.  மக்களுக்கு  இரு கரங்கள் கூப்பிபிரதமர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் இன்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.  நாட்டின் வளர்ச்சியை விட தனி மனிதனுடைய உயிர் மேலானது என பிரதமர் மோடி உருக்கம்.  கட்டுப்பாடுகள் இல்லை எனில் உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்கு சமம்.  அலட்சியமாக இருந்தால் நோய்த்தொற்று பரவிவிடும். ஒரு நபருக்கு பரவிவிட்டால் அதன் எண்ணிக்கை 10 நாட்களில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு  பரவிவிடும் அடுத்த நான்கு நாட்களில் பல மடங்கு அதன் எண்ணிக்கை கூடும்.  ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்...

நான்கில் ஒரு பங்கு விலை:நம் நாட்டில் கொரோனா சோதனைக் கருவி ரெடி!

Image
  புதுடெல்லி: புனேவைச் சேர்ந்த மூலக்கூறு கண்டறியும் நிறுவனமான மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் தனது கோவிட் -19 சோதனைக் கருவிக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து (சி.டி.எஸ்.கோ) வணிக ரீதியான ஒப்புதல் பெற்றுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. சி.டி.எஸ்.கோவிடம் வணிக ரீதியான அங்கீகாரத்தைப் பெற்ற முதல் '' மேட் இன் இந்தியா '' கிட் இந்நிறுவனத்தின் சோதனை கிட் ஆகும், இதற்கு மைலாப் பாத்தோடெக்ட் கோவிட் -19 குவாலிட்டேடிவ் பி.சி.ஆர் கிட் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "மேக் இன் இந்தியா" மற்றும் உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், கோவிட் -19 கிட் WHO / CDC வழிகாட்டுதல்களின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பதிவு நேரத்தில் உருவாக்கப்பட்டது மற்றும் மதிப்பீடு செய்யப்பட்டது, "மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் எம்.டி. ஹஸ்முக் என்றார் ராவல். டெஸ்ட் கிட்களின் உள்ளூர் மூலப்பொருள் இந்தியாவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும், ஏனெனில் மைலாப்பின் சோதனைக் கருவி தற்போதைய கொள்முதல் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவாகு...