திண்டுக்கல்லில் இனி ’பெண்ணாட்சி’... அத்தணை பதவிகளிலும் ஆளுமை காட்டும் பெண் உயரதிகாரிகள்

பூட்டுக்கும், கோட்டைக்கும் பேமசாக இருந்து வரும் திண்டுக்கல், இனி பெண்களின் ஆளுமைக்கும் உதாரணமாக மாறி மேலும் பெயர் பெற தயாராகி உள்ளது.

 

ஆமாங்க, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத்துறையின் அனைத்து முக்கியப் பதவிகளிலும் பெண்களே நியமிக்கட்டு இருப்பதால், இந்தியாவிலேயே பெண்களால் ஆளப்படும் முதல் மாவட்டமாக விளங்குகிறது திண்டுக்கல்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் எஸ்.பி.,யாக ரவளிபிரியா நியமிக்கப்பட்டார். இதையடுத்து மாவட்டத்தில் உள்ள முதன்மைப் பொறுப்புக்கள் அனைத்திலும் பெண்கள் கோலோச்சுகின்றனர்.


திண்டுக்கல் மாவட்டத்தின் கலெக்டர் மு.விஜயலட்சுமி உள்ளார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா இருக்கிறார். மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக கவிதா ஆகியோர் பணியில் உள்ளனர்.

 

திண்டுக்கல் ஆர்.டி.ஓ., வாக உஷா உள்ளிட்ட பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

 

தற்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி யாக முதல்முறையாக பெண் போலீஸ் உயரதிகாரியான ரவளிபிரியா நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

சென்னை மாதவரம் துணை ஆணையராக பணிபுரிந்த ரவளிபிரியா, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய பொறுப்புக்களிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டம் பெண் ஆளுமைகளால் நிர்வகிக்கப்பட இருக்கிறது.  

 

மாவட்டத்தை சிறப்பாக வழிநடத்த அனைத்து பெண் உயரதிகாரிகளுக்கும் தமிழ் அஞ்சல் நாளிதழின் வாழ்த்துக்கள்..

------------------------------------------------------------------------------------------------------------------

 

டிஸ்கி: தனி ஒரு பெண்ணாலோ, ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண்களாலோ, அல்லது சில பெண்கள் சேர்ந்தோ நடத்தும் ஆட்சி தான் பெண்ணாட்சி -MATRIARCHY எனப்படுகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்