கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளப்பலூர் பேரூராட்சி, சிறுவலூர் மற்றும் வெள்ளாங்கோவில் ஊராட்சி  ஆகிய பகுதிகளில் சிறுவலூர் வட்டார  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில்  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் ஆய்வுகள் மேற்கொண்டார்.


ஆய்வின் போது பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் முழு உடல் கவசம் ஆகியவற்றை வழங்கினார்.பின்னர் லாரிகள் மூலம் மஞ்சள் கலந்த கிருமி நாசினி அனைத்து இடங்களிலும் தெளிக்கபட்டது.இதில் கோட்டாட்சியர் ஜெயராமன்,  கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார்,  இளநிலை உதவியாளர் காசிலிங்கம்,  ஊராட்சி மன்ற தலைவர்,  சிறுவலூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார்,  ஊராட்சி கழகச் செயலாளர் அண்ணாதுரை,  யூனியன் கவுன்சிலர்கள் வேல்முருகன், ஆப்பிள் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்  செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் படி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது எனவும், 
மளிகைக்கடை மற்றும் பெட்ரோல் பங்க் செயல்படும்  நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் பொதுமக்கள்  வெளியே செல்லாமலும் அரசின் அறிவிப்புகள் அறிந்து  முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கூறினார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்