தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா.. சென்னையில் 28 பேருக்கு இன்று பாதிப்பு...தமிழகத்தில் இதுவரை 1885 பேருக்கு தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் இன்றொரு நாள் முழு ஊரடங்கில் இருக்கின்றன.
இந்த நிலையில், இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆனது.
மாவட்ட வாரியாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம்: சென்னை-28, மதுரை-15, விருதுநகர்-7, விழுப்புரம்-4, நாமக்கல்-4, திருப்பூர்-2, கள்ளக்குறிச்சி-1, சிவகங்கை-1, சேலம்-1, திருவள்ளூர்-1,
இன்று ஒரே நாளில் 60 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தமாக 1020 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 865 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.