தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம்; துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்

தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்

திருவண்ணாமலை ஏப். 26 - திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரண பொருட்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் நேற்று வழங்கினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 69 ஊராட்சிகளிலும் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைக்காவலர்கள் டேங்க் ஆபரேட்டர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேவனந்தல் கிராமத்தில் ஊராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 22 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேதுராமன் தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம் கிருமிநாசினி சோப்பு மற்றும் காய்கறி அரிசி மற்றும் உணவு பொருட்களையும் வழங்கினார். இதில் ஊராட்சி செயலர்கள் செல்வமணி (தேவனந்தல்), எஸ்.வி. முருகன் (அடிஅண்ணாமலை), தேவனந்தல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்பத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஹேமலதா பிரகாஷ், கேசவன், முத்தமிழ் கோவிந்தராஜ், வாசு, லட்சுமி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்