சிற்றிதழ்களுக்கு உதவ அரசு முன் வர வேண்டும்: பழ. நெடுமாறன் வேண்டுகோள்

கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை அரசின் கவனத்திற்கும் அரசியல் தலைவர்களின் கவனத்திற்கும் இவ்வூடகங்களின் உரிமையாளர்கள் கொண்டு வந்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


பெரும் நிறுவனங்களினால் நடத்தப்படும் இத்தகைய ஊடகங்களே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் போது சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதே பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய வளர்ச்சிக்காக சிற்றிதழ்கள் ஆற்றி வரும் தொண்டு அளப்பரியதாகும். ஆனால் மத்திய – மாநில அரசுகளின் சார்பில் அளிக்கப்படும் விளம்பரங்கள் எதுவும் சிற்றிதழ்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்படுவதில்லை. இலக்கிய வளர்ச்சி ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு சிற்றிதழ்கள் தொடர்ந்து இழப்புகளுக்கு நடுவே நடத்தப்படுகின்றன. இந்தக் காலக்கட்டத்திலாவது மத்திய – மாநில அரசுகள் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் குறைந்த அளவு 40 விழுக்காடாவது சிற்றிதழ்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். அரசு நூலகங்களுக்கும் இவை வாங்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!