திருப்பூரில் கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் குறைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் பர்னிச்சர் சங்கம், தமிழ்நாடு செல்போன் வியாபாரிகள் சங்கம், திருப்பூர் பாத்திரக்கடை சங்கம் உள்பட அனைத்து வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


கூட்டத்துக்கு சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் குமரன், மாநிலத் துணைத் தலைவர்கள் பாலநாகமாணிக்கம், ஞானசேகரன், திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கேசிஎம் துரைசாமி, திருப்பூர் மளிகை வியாபாரிகள் சங்கம் சிதம்பரம், மாவட்ட பேரமைப்பு மாநகரத் தலைவர் ஜான் வல்தரீஸ், துணை தலைவர் லிங்க முருகன், பேரமைப்பு மாவட்ட ஆலோசகர்கள் துரைசாமி பெரியசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


இந்தக் கூட்டத்தில் நாளை (23.6.2020) முதல் ஜூலை 1 ஆம் தேதி வரை காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறந்து வியாபாரம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கங்களை சார்ந்த வியாபாரிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம். என பேரமைப்பின் தலைவர் கோவிந்தசாமி கூறியுள்ளார்.


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்