தமிழ்நாட்டில் இன்று 2710 பேருக்கு கொரோனா... சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலும் பரவல் தீவிரம்

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 2710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை காரர்கள் 1,487 பேர், மற்ற மாவட்டத்துக் காரர்கள் 1223 பேர் ஆவர்.


இன்று மட்டும் 25 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 790 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தமாக தொற்றுக்கு ஆளாவர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று மட்டும் 1358 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குச் சென்று உள்ளனர். 


இன்று 37 பேர் மரணமடைந்துள்ளனர்.


இப்போதைய 27 ஆயிரத்து நூற்று எழுபத்து எட்டு பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்ற அனைவரும் மற்ற அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குச் சென்று விட்டனர்.


திருவண்ணாமலை, செங்கல்பட்டு, மதுரை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்நோய்தொற்று அதிகமாகி வருவது தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. 


சென்னை தவிர செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவுடன் சேர்த்து மதுரை மாவட்டத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது


 


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்