குளக்கரை புதரில் உல்லாசமாக இருந்த காதல் ஜோடி...நேரில் பார்த்த 8 வயது சிறுவனை குத்திக் கொன்ற கொடூரம்

குளக்கரை புதரில் காதலியுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த சிறுவனை குத்திக்கொன்ற கொடூர வாலிபர் கைது. 


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையம் பகுதியை சார்ந்தவர்கள் தங்கராஜ்-சுமதி தம்பதியர். பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர்.


இவர்களுக்குவிக்னேஷ் (9) பவனேஷ் (8) இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும்  அங்குள்ள அரசு பள்ளியில் 4 மற்றும் 3ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.


இந்நிலையில்நேற்று முன் தினம் காலை முதல் இளைய மகன் பவனேஷ் காணாமல் போய் விட்டான். பெற்றோர்கள் அவனை தேடி வந்தன.


இந்தநிலையில் நேற்று பள்ளபாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் உள்ள புதரில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது பற்றி ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலிசார் பவனேஷின் பிணத்தை கைப்பற்றி விசாரணையை முடுக்கி விட்டனர்.


பவனேஷை கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதியில்  குத்தி கொண்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.


விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21) என்ற  பாலிடெக்னிக் மாணவர் பவனேஷை கொலை செய்து இருப்பது தெரியவந்தது.


மேலும் விசாரணையில் தெரியவந்த தகவல்கள் நெஞ்சம் பதற வைப்பதாக உள்ளன.


இதுபற்றியவிவரம் வருமாறு:


அஜித் அந்தப்பகுதியில் ஸ்பைக் கட்டிங் சகிதம் காதல் மன்னனாக உலா வந்துள்ளார். பேசிப்பேசியே பெண்களை மயக்கும் இவரது பேச்சில் ஏராளமான பெண்கள் மயங்கி உள்ளனர்.


தற்போதையநிலையில் இரு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார் அஜீத்.


அதில் ஒரு பெண் இன்னும் 17 வயது சிறுமியாக இருந்துள்ளார்.


சம்பவத்தன்று அஜித் 17வயது சிறுமியுடன் குளக்கரையில் உல்லாசமாக இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.


இதை அந்தப்பகுதிக்கு விளையாடச்சென்ற பவனேஷ் பார்த்து உள்ளான். என்ன ஏதுவென்று புரியாத பவனேஷ் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளான். 


பவனேஷ் தப்பினால் இன்னொரு காதலிக்கு விஷயம் தெரிந்து விடும் என்பதால், 


தற்போது உல்லாசமாக இருந்த சிறுமியான காதலி சிறுவன் பவனேஷை நைசாக பேசி அழைத்து வந்துள்ளார.


பாலிடெக்னிக் வாலிபர் அஜித் பாட்டிலால் அந்த சிறுவன் பவனேஷை குத்திக் கொன்று விட்டு தப்பி சென்றார்.


இதையடுத்துபோலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் அஜித்தை கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்த அந்த சிறுமியையும் கைது செய்தனர்.


 அஜீத்தும், அவரது காதலியும் சேர்ந்து 8 வயது சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!